விடுதலையாகும் சசிகலாவை காண முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் வருகை!

 

விடுதலையாகும் சசிகலாவை காண முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் வருகை!

சிறையிலிருந்து விடுதலையாகும் சசிகலாவை காண முன்னாள் அமைச்சர்கள் வருகை புரிந்துள்ளனர்.

கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சசிகலா பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது 4 ஆண்டுகால சிறைவாசம் முடிந்து சசிகலா இன்று விடுதலையாகிறார். மருத்துவமனைக்கு செல்லும் சிறைத்துறை கண்காணிப்பாளர் லதா தலைமையிலான குழு சிறைத்துறை நடைமுறைகளை முடித்த பின்பு அவரை காலை 10.30 மணிக்கு விடுதலை செய்கிறது.

விடுதலையாகும் சசிகலாவை காண முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் வருகை!

இதனிடையே சசிகலாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது சசிகலாவின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவருக்கு ஒரு தொற்று குறைந்துள்ளதாகவும் மருத்துவர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இருப்பினும் உடல்நலனை கருத்தில் கொண்டு சசிகலா விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்ததும் வீடு திரும்புவார் என்று கூறப்பட்டுள்ளது.

விடுதலையாகும் சசிகலாவை காண முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் வருகை!

இந்நிலையில் விடுதலையாகும் சசிகலாவை பார்க்க பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் தொண்டர்கள் குவிந்துள்ளனர். முன்னாள் அமைச்சர் பழனியப்பன், முன்னாள் எம்எல்ஏக்கள் ரங்கசாமி பார்த்திபன், முருகன், உள்ளிட்டோர் வருகை புரிந்துள்ளனர். அத்துடன் சசிகலாவை காணஅவரின் வழக்கறிஞர் ராஜாசெந்தூர் பாண்டியனும் வந்துள்ளார்.