“பண்டிகை கால ‘Grand sale’ போல நாடு விற்கப்படுகிறது” – மத்திய அரசை காய்ச்சி எடுத்த ப.சிதம்பரம்!

“பண்டிகை கால ‘Grand sale’ போல நாடு விற்கப்படுகிறது” – மத்திய அரசை காய்ச்சி எடுத்த ப.சிதம்பரம்!

National Monetisation Pipeline (NMP) என்ற திட்டத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் அறிவித்தார். அதன்படி அடுத்த 4 ஆண்டுகளில் மத்திய அரசுக்குச் சொந்தமாகவும் பொதுத் துறை நிறுவனங்கள் வசமும் உள்ள 6 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் அடுத்த 25 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்படவுள்ளன. சாலைகள், ரயில்வே, துறைமுகங்கள், விமான நிலையங்கள் உள்ளடங்கிய போக்குவரத்துக் கட்டமைப்புகள், மின் உற்பத்தி நிலையங்கள், மின் பாதைகள், குழாய் பாதைகள், நிலங்கள், கட்டடங்கள் ஆகியவை குத்தகைக்கு விடப்படவுள்ளன.

“பண்டிகை கால ‘Grand sale’ போல நாடு விற்கப்படுகிறது” – மத்திய அரசை காய்ச்சி எடுத்த ப.சிதம்பரம்!

இத்திட்டத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மிகக் கடுமையாக எதிர்த்து வருகின்றன. மக்களின் சொத்துகளை எப்படி விற்கலாம் என்றும் கேள்வியெழுப்பியுள்ளனர். .நாட்டின் சொத்துகள் எதையும் நாங்கள் விற்கவில்லை. குறுகிய கால அளவிலான குத்தகைக்குதான் விடுகிறோம் என்று மத்திய அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இச்சூழலில் காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் இதுதொடர்பாகப் பேசியுள்ளார்.

“பண்டிகை கால ‘Grand sale’ போல நாடு விற்கப்படுகிறது” – மத்திய அரசை காய்ச்சி எடுத்த ப.சிதம்பரம்!

அப்போது அவர் கூறுகையில், “70 ஆண்டுகளாக மத்திய அரசு நிர்வகித்து வந்த பொதுத்துறை நிறுவனங்கள், பொதுச்சொத்துக்களை மொத்த விலைக்கு விற்கப் போகின்றனர். பண்டிகை காலங்களில் ‘கிராண்ட் சேல்’, ‘கிராண்ட் க்ளோசிங் சேல்’ என நடத்துவது போல, பொதுத்துறை நிறுவனங்களுக்கு மத்திய அரசு மூடுவிழா நடத்த முடிவு செய்துள்ளது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம்” என்றார்.