நடிகை சாந்தினியை ஏமாற்றிய வழக்கில் ஜாமீன் கோரி மாஜி அமைச்சர் மனு தாக்கல்!

 

நடிகை சாந்தினியை ஏமாற்றிய வழக்கில் ஜாமீன் கோரி மாஜி அமைச்சர் மனு தாக்கல்!

அதிமுக ஆட்சியில் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராக இருந்த மணிகண்டனும், தானும் ஒன்றாக வாழ்ந்ததாகவும், தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றியதுடன், கட்டாயப்படுத்தி கருகலைப்பு செய்ய வைத்ததாகவும், அந்தரங்க படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டுவதாகவும், நடிகை சாந்தினி சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்திருந்தார்.

நடிகை சாந்தினியை ஏமாற்றிய வழக்கில் ஜாமீன் கோரி மாஜி அமைச்சர் மனு தாக்கல்!

இதற்கு விளக்கம் அளித்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன், தனக்கும் அந்த நடிகைக்கும் தொடர்பில்லை என்றும், தன்னிடம் பணம் பறிக்கும் நோக்கத்துடன், நடிகையும், வழக்கறிஞர் சுதன் என்பவரும் பொய்ப் புகார் அளித்ததாக தெரிவித்தார். வழக்கறிஞர் சுதன் தன்னிடம் 3 கோடி ரூபாய் வரை பேரம் பேசியதாகவும் தெரிவித்து இருந்தார். இதனிடையே கட்டாய கருக்கலைப்பு உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

நடிகை சாந்தினியை ஏமாற்றிய வழக்கில் ஜாமீன் கோரி மாஜி அமைச்சர் மனு தாக்கல்!

மணிகண்டனுக்கு எதிராக ஆதாரங்களைத் திரட்ட தனிப்படை போலீசார் ராமநாதபுரம் சென்றனர். மணிகண்டனின் குடும்பத்தினர், உதவியாளரிடம் விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். ஆனால் மணிகண்டனின் வீடு பூட்டியிருப்பதாகவும் அவர் தலைமறைவாகி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியன. அதற்குப் பின் அவர் சென்னையில் பதுங்கியிருப்பதாகவும், உதவியாளர்களைத் தொடர்புகொண்டு உதவிகள் பெறுவதாகவும் கூறப்பட்டது. இச்சூழலில் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவரது சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.