கரூருக்கு ஸ்கெட்ச் போட்ட அண்ணாமலை… வானதியின் கோவைக்கும் துண்டு போட்டுள்ளார்!

கரூருக்கு ஸ்கெட்ச் போட்ட அண்ணாமலை… வானதியின் கோவைக்கும் துண்டு போட்டுள்ளார்!

தமிழகத்தில் எந்த தொகுதியில் போட்டியிட்டால் வெற்றி பெறலாம் என்று முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலையின் தேர்தல் குழுவினர் இப்போதே அலசி ஆராய ஆரம்பித்துவிட்டதாக பா.ஜ.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கர்நாடக மாநிலத்தில் போலீஸ் அதிகாரியாக இருந்து சர்ச்சையில் சிக்கியவர் அண்ணாமலை. அரசியலில் ஈடுபடப் போவதாக பதவியை ராஜினாமா

கரூருக்கு ஸ்கெட்ச் போட்ட அண்ணாமலை… வானதியின் கோவைக்கும் துண்டு போட்டுள்ளார்!

செய்துவிட்டு தமிழகம் வந்தார். விவசாயம், தற்சார்பு பொருளாதாரம் என்று கூறிக் கொண்டிருந்தவர், பா.ஜ.க -வில் இணைந்தார். கட்சியில் இணைந்த ஒரு சில நாட்களில் மாநிலத் துணைத் தலைவர் பதவியும் வழங்கப்பட்டது. உயர் பதவியில் இருந்து வந்தவர் என்பதால் இத்தனை நாள் கட்சிக்காக பாடுபட்ட பலரும் பல்லைக் கடித்துக்கொண்டு பொறுமை காத்து வருகின்றனர்.
கட்சியில் இணைந்த அண்ணாமலை அடுத்த ஆண்டு நடைபெற உள்ள

கரூருக்கு ஸ்கெட்ச் போட்ட அண்ணாமலை… வானதியின் கோவைக்கும் துண்டு போட்டுள்ளார்!

சட்டமன்ற தேர்தலில் எங்கே போட்டியிடலாம் என்று தன்னுடைய சட்ட, இணைய, தேர்தல் குழுவினருடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளாராம். தமிழகத்தில் கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களில் பா.ஜ.க பலமாக உள்ளது. அ.தி.மு.க கூட்டணியில் அங்கு போட்டியிட்டால் வெற்றி பெறலாம் என்ற ஆசை அவருக்கு உள்ளதாம்.

கரூருக்கு ஸ்கெட்ச் போட்ட அண்ணாமலை… வானதியின் கோவைக்கும் துண்டு போட்டுள்ளார்!

இதைத் தொடர்ந்து அவரது குழுவினர் இங்கு ஆய்வு மேற்கொண்டுள்ளனர். கன்னியாகுமரியில் பா.ஜ.க பலமாக இருந்தாலும் கடைசி நேரத்தில் சாதி அடிப்படையில் மாற வாய்ப்புள்ளது. எனவே, கோவையை டிரை செய்யலாம் என்று சொல்லியிருக்கிறார்கள். கோவையில் ஏற்கனவே வானதி ஶ்ரீனிவாசன் உள்பட பலரும் வெயிட்டிங் லிஸ்டில் உள்ளனர். எனவே, ஒத்துழைப்பு கிடைப்பது கடினம் என்று கூறப்பட்டுள்ளது.

கரூருக்கு ஸ்கெட்ச் போட்ட அண்ணாமலை… வானதியின் கோவைக்கும் துண்டு போட்டுள்ளார்!

இதனால் கரூரை டிரை செய்யலாம் என்று கடைசியில் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. தேர்தல் நேரத்தில் கோவை, கரூர் என இரண்டு இடங்களை கேட்டு வைப்போம், எங்கு வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கே போட்டியிடலாம் என்ற முடிவுக்கு அண்ணாமலை டீம் வந்துள்ளதாம். இப்போதே களப் பணியையும் தொடங்கிவிட்டார்களாம்.

கரூருக்கு ஸ்கெட்ச் போட்ட அண்ணாமலை… வானதியின் கோவைக்கும் துண்டு போட்டுள்ளார்!

புதிதாக கட்சியில் இணைந்த முன்னாள் ஐ.ஏ.எஸ் அண்ணாமலையின் வருகை பா.ஜ.க மற்றும் கூட்டணிக் கட்சியின் இமேஜை அதிகரிக்கும். அவருக்கு மக்கள் நிச்சயம் வாக்களிப்பார்கள் என்று பா.ஜ.க தலைவர்கள் சொல்லி வருகிறார்களாம். ஓய்வு பெற்ற டி.ஜி.பி-யே அ.தி.மு.க-வில் எம்.எல்.ஏ-வாக உள்ள நிலையில் பா.ஜ.க-வின் இந்த பேச்சு எல்லாம் எந்த அளவுக்கு எடுபடும் என்று தெரியவில்லை.