உறுப்புகள் செயல் இழந்ததால் முன்னாள் கிரிக்கெட் வீரரும், உத்தர பிரதேச அமைச்சருமான சேட்டன் சவுகான் மரணம்..

உறுப்புகள் செயல் இழந்ததால் முன்னாள் கிரிக்கெட் வீரரும், உத்தர பிரதேச அமைச்சருமான சேட்டன் சவுகான் மரணம்..

முன்னாள் கிரிக்கெட் வீரரும், உத்தர பிரதேச அமைச்சருமான சேட்டன் சவுகான் நேற்று மரணம் அடைந்தார். 73 வயதான சேட்டன் சவுகானுக்கு அண்மையில் கொரோனா வைரஸ் இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. இதனையடுத்து குருகிராமில் உள்ள மெதந்தா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். நேற்றுமுன்தினம் அவரது உடல்நலம் நிலையானது என்ற நிலையிலிருந்து ஆபத்தான நிலைக்கு மாறியது.

உறுப்புகள் செயல் இழந்ததால் முன்னாள் கிரிக்கெட் வீரரும், உத்தர பிரதேச அமைச்சருமான சேட்டன் சவுகான் மரணம்..

பல்வேறு உறுப்புகள் செயல் இழந்ததால், சேட்டன் சவுகான் சிகிச்சை பலன் இன்றி நேற்று உயிர் இழந்தார். உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசில் சிவில் பாதுகாப்பு, சைனிக் நலன் உள்ளிட்ட துறைகளின் அமைச்சராக அவர் இருந்தார். சேட்டன் சவுகான் மறைவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்பட பல்வேறு அரசியல் தலைவர்கள், கிரிக்கெட் வீரர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். கடந்த 15 நாட்களுக்குள் பலியான 2வது உத்தர பிரதேச அமைச்சர் சேட்டன் சவுகான் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கடந்த 2ம் தேதியன்று அமைச்சராக இருந்த கமல் ராணி கொரோனாவுக்கு பலியானார்.

உறுப்புகள் செயல் இழந்ததால் முன்னாள் கிரிக்கெட் வீரரும், உத்தர பிரதேச அமைச்சருமான சேட்டன் சவுகான் மரணம்..

முன்னாள் கிரிக்கெட் வீரரான சேட்டன் சவுகான், 1970களில் டெஸ்ட் போட்டிகளில் சுனில் கவாஸ்கருடன் இணைந்து முதலில் களம் இறங்குவார். மொத்தம் 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2,084 ரன்களை சேர்த்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 31.57. சர்வதேச கிரிக்கெட்டில் சதம் அடிக்காமல் 2 ஆயிரத்துக்கும் அதிகமான ரன் கடந்த முதல் வீரர் சேட்டன் சவுகான் என்பது குறிப்பிடத்தக்கது. சேட்டன் சவுகான் 7 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 153 ரன்களை சேர்த்துள்ளார். ஒரு நாள் போட்டிகளில் அதிகபட்சமாக நியுசிலாந்து எதிராக அடித்த 46 ரன்கள் எடுத்தார்.