உண்மையை தொந்தரவு செய்யலாம் ஆனால் தோற்கடிக்க முடியாது.. பதவியை பறிகொடுத்த முன்னாள் அமைச்சர்

 

உண்மையை தொந்தரவு செய்யலாம் ஆனால் தோற்கடிக்க முடியாது.. பதவியை பறிகொடுத்த முன்னாள் அமைச்சர்

உண்மையை தொந்தரவு செய்யலாம் ஆனால் தோற்கடிக்க முடியாது என ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி அமைச்சர் பதவியை பறிகொடுத்த அனில் தேஷ்முக் தெரிவித்தார்.

மகாராஷ்டிரா உள்துறை அமைச்சராக இருந்த அனில் தேஷ்முக், மாதந்தோறும் ரூ.100 கோடி வசூல் செய்து தரும்படி காவல்துறை அதிகாரியிடம் கூறியதாக மும்பையின் முன்னாள் காவல்துறை ஆணையர் பரம் பீர் சிங் பரபரப்பான குற்றச்சாட்டை கூறினார். இதனையடுத்து அனில் தேஷ்முக் மீதான குற்றச்சாட்டை சி.பி.ஐ. விசாரிக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் அனில் தேஷ்முக் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

உண்மையை தொந்தரவு செய்யலாம் ஆனால் தோற்கடிக்க முடியாது.. பதவியை பறிகொடுத்த முன்னாள் அமைச்சர்
சி.பி.ஐ.

தற்போது அனில் தேஷ்முக்குக்கு எதிராக நிதி மோசடி வழக்கை அமலாக்கத்துறை பதிவு செய்துள்ளது. அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்த சில மணிநேரத்தில் அனில் தேஷ்முக் அவர் பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அனில் தேஷ்முக் கூறியிருப்பதாவது: என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு அமலாக்கத்துறை எனக்கு சம்மன் அனுப்பும் என்று ஊடக செய்திகள் வாயிலாக தெரிந்து கொண்டேன். இதற்கு முன்னர் சி.பி.ஐ. விசாரித்தது. இப்போது அமலாக்கத்துறை விசாரிக்க உள்ளது. எந்தவொரு தவறும் செய்யாவிட்டாலும் அரசியல் நலனுக்களுக்காக நான் குறிவைக்கப்படுகிறேன்.

உண்மையை தொந்தரவு செய்யலாம் ஆனால் தோற்கடிக்க முடியாது.. பதவியை பறிகொடுத்த முன்னாள் அமைச்சர்
அமலாக்கத்துறை

நான் உள்துறை அமைச்சராக இருந்தபோது, அன்வே நாயக் மரண விசாரணைக்கு முயன்றேன். பின்னர் மாநில அரசுடன் கலந்துரையாடினேன். மாநில அரசின் அனுமதி இல்லாமல் சிபிஐ நேரடியாக எந்தவொரு வழக்கையும் விசாரிக்க கூடாது என்று முடிவெடுத்தேன். இது தவிர மோகன் டெல்கர் மரண வழக்கிலும் ஒரு விசாரணை அமைக்கப்பட்டது. இதனால் மத்திய அரசு ஏமாற்றமடையக்கூடும். என்னுடைய நடவடிக்கைகளால் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை போன்ற விசாரணைகள் நடத்தப்படுகின்றன. ஆனால் உண்மையை தொந்தரவு செய்யலாம் ஆனால் தோற்கடிக்க முடியாது என்ற நான் உறுதியாக நம்புகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.