தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவியுடன் திமுக முன்னாள் எம்.பி. சந்திப்பு!

 

தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவியுடன் திமுக முன்னாள் எம்.பி. சந்திப்பு!

தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவிவை திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம் இன்று சந்தித்தார்.

திமுக விவசாய அணி மாநில செயலாளராக இருந்த கே.பி.ராமலிங்கம் திமுகவின் முன்னாள் எம்.பியாக பதவி வகித்தார். கே.பி.ராமலிங்கம் கடந்த ஏப்ரல் மாதம் திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார். இவர் திமுக தலைமையை விமர்சித்து பேசியதால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. அத்துடன் இவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரியின் ஆதரவாளர் ஆவார்.

தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவியுடன் திமுக முன்னாள் எம்.பி. சந்திப்பு!

இந்நிலையில் தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி. ரவியை முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம் இன்று சந்தித்து பேசினார். இன்று சென்னை வரும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க கே.பி.ராமலிங்கம் திட்டமிட்டுள்ள நிலையில் அவர் பாஜகவில் இணைய போவதாக கூறப்படுகிறது. முன்னதாக தமிழக பாஜக தலைவர் எல். முருகன், மு.க. அழகிரி பாஜகவிற்கு வந்தால் வரவேற்போம் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.