முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மீது முன்னாள் மாவட்ட செயலாளர் குற்றச்சாட்டு!

 

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மீது முன்னாள் மாவட்ட செயலாளர் குற்றச்சாட்டு!

மதுரையில் 20 ஆண்டுகளுக்கு முன்னர் ஜெயலலிதா திறந்து வைத்த எம்ஜிஆர் சிலையின் கல்வெட்டை செல்லூர் ராஜூ மாற்றி விட்டதாக முன்னாள் மாவட்ட செயலாளர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மதுரை மாவட்டம் மாட்டுத்தாவணி சந்திப்பில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலிதா சிலைகள் உள்ளது. கடந்த 2001ஆம் ஆண்டு எம்ஜிஆர் சிலையை ஜெயலலிதா திறந்து வைத்த நிலையில் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அவரது சிலையும் அதன் அருகிலேயே நிறுவப்பட்டது. அதனை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார். இந்த நிலையில், எம்ஜிஆர் சிலையின் கீழ் இருந்த கல்வெட்டை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மாற்றிவிட்டதாக முன்னாள் மாவட்ட செயலாளர் ராஜாங்கம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மீது முன்னாள் மாவட்ட செயலாளர் குற்றச்சாட்டு!

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 2001 ஆம் ஆண்டு மதுரையில் ஜெயலலிதா உத்தரவிட்டதன் பேரில் 2.75 லட்சம் செலவில் எம்ஜிஆர் சிலையை நிறுவினேன். ஜெயலலிதா அதனை திறந்து வைத்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அமைச்சர் செல்லூர் ராஜூ அங்கு ஜெயலலிதா சிலையை அங்கு நிறுவினார். நேற்று ஜெயலிதா சிலையின் கீழ் வைக்கப்பட்டிருந்த கல்வெட்டை மாற்றி புதிதாக கல்வெட்டை பதித்துள்ளார் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ.

தனது பெயர் குறிப்பிடும் வகையில் கல்வெட்டை மாற்றியுள்ளார். இது குறித்து விளக்கம் கேட்க போன் செய்தால் போனை அணைத்து விடுகிறார். அந்த கல்வெட்டை மீண்டும் வைக்க வேண்டும். இல்லையெனில் கட்சித் தலைமையிடம் புகார் அளித்து வழக்கு தொடர்வேன் என்று கூறியுள்ளார்.