டெல்லி கிளப்பின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் டோபல் கொரோனாவால் உயிரிழப்பு

டெல்லி கிளப்பின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் டோபல் கொரோனா நோய்த் தொற்று காரணமாக உயிரிழந்தார்.

டெல்லி: டெல்லி கிளப்பின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் டோபல் கொரோனா நோய்த் தொற்று காரணமாக உயிரிழந்தார்.

பிரபல முன்னாள் டெல்லி கிளப் கிரிக்கெட் வீரரும், டெல்லியின் முன்னாள் யு-23 ஊழியருமான சஞ்சய் டோபல் இன்று காலை கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 53 ஆகும். அவரது குடும்பத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் இந்த தகவல் தெரிவித்தன. அவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் சித்தாந்த் ராஜஸ்தான் அணிக்காக முதல் தர கிரிக்கெட்டில் விளையாடுகிறார். அதேபோல இரண்டாவது மகன் தில்லி ஏகான்ஷ் டெல்லி யு-23 அணிக்காக விளையாடுகிறார்.

டோபலுக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டதை தொடர்ந்து ஒரு வாரத்திற்கு முன்பு பகதூர்கரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அதில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி ஆனது. அவரது நிலை மோசமடைந்ததை அடுத்து துவாரகா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு பிளாஸ்மா சிகிச்சை வழங்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி சஞ்சய் டோபல் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.

Most Popular

பொதுமுடக்க விதிமீறல்: இதுவரை 8.52 லட்சம் வழக்குகள் பதிவு!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சமூக விலகல் மற்றும் மாஸ்க் அணிதல் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கை மூலமாக தான் நம்மை காத்துக் கொள்ள முடியும் என்பதால், இந்த கொடிய...

மதுரையில் குறையும் கொரோனா பரவல் : அமைச்சர் உதயகுமார் தகவல்!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 5,063பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,68,285 ஆக அதிகரித்துள்ளது. மதுரையில் மேலும் 95...

சென்னையில் கொரோனாவால் ஒரே நாளில் 18 பேர் மரணம்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 5,063பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,68,285 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால்...

சட்டமன்ற உறுப்பினரும் நடிகருமான கருணாஸின் பாதுகாவலருக்கு கொரோனா!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 5,063பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,68,285 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த...