மத வழிபாட்டு தலங்களை மீண்டும் திறக்கும் மத்திய அரசின் முடிவை விமர்சித்த முன்னாள் கிரிக்கெட் வீரர்..

மத வழிபாட்டு தலங்களை மீண்டும் திறக்கும் மத்திய அரசின் முடிவை விமர்சித்த முன்னாள் கிரிக்கெட் வீரர்..

68 நாட்களாக நீடித்து வந்த நாடு தழுவிய லாக்டவுன் நேற்றோடு முடிவடைந்தது. தற்போது நோய் கட்டுப்படுத்துதல் மண்டலங்களில் மட்டுமே இம்மாதம் 30ம் தேதி வரை லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது. மற்ற பகுதகளில் இன்று முதல் லாக்டவுன் விதிமுறைகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது. இம்மாதம் 8ம் தேதி முதல் மொத்தம் 3 கட்டங்களாக லாக்டவுன் தளர்வுகளை மத்திய அரசு செயல்படுத்த உள்ளது.

மத வழிபாட்டு தலங்களை மீண்டும் திறக்கும் மத்திய அரசின் முடிவை விமர்சித்த முன்னாள் கிரிக்கெட் வீரர்..

முதல் கட்டமாக வரும் 8ம் தேதி முதல் ஷாப்பிங் மால்கள், ரெஸ்ட்ராண்ட், ஹோட்டல்கள் மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அன்றுதான் பொதுமக்களுக்காக அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட உள்ளது. அனைத்து மத வழிபாட்டு தலங்களும் விரைவில் திறக்கப்படும் என்ற செய்தியால் அனைத்து தரப்பினரும் சந்தோஷத்தில் உள்ளனர். இந்நிலையில், மத வழிபாட்டு தலங்களை திறக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி கொடுத்து இருப்பதை முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா கேள்வி எழுப்பியுள்ளார்.

மத வழிபாட்டு தலங்களை மீண்டும் திறக்கும் மத்திய அரசின் முடிவை விமர்சித்த முன்னாள் கிரிக்கெட் வீரர்..

ஆகாஷ் சோப்ரா இது தொடர்பாக டிவிட்டரில், மால்ஸ், ரெஸ்ட்ராண்ட் போன்றவை நிதிதாக்கங்கள் கொண்டவை. மற்றும் ஒருவேளை அதனால்தான் அவற்றை எப்போதும் மூடி வைப்பது சாத்தியமில்லை. ஆனால் பொதுமக்களுக்காக வழிபாட்டு தலங்களை திறக்க வேண்டிய அவசியம் நமக்கு ஏன்? கடவுள் எங்கும் இருக்கிறார்.. இல்லையா? என பதிவு செய்துள்ளார். ஆகாஷ் சோப்ராவின் கருத்துக்கு டிவிட்டர்வாசிகள் அதிரடியாக பதில் அளித்துள்ளனர்.