பா.ஜ.க.வுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ…. மத்திய பிரதேசத்தில் காலியாகும் காங்கிரஸ் கூடாரம்

 

பா.ஜ.க.வுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ…. மத்திய பிரதேசத்தில் காலியாகும் காங்கிரஸ் கூடாரம்

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.

மத்திய பிரதேசத்தில் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் தயவுடன் ஆட்சியை அமைத்தது. இந்நிலையில் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கும், அப்போது முதல்வராக இருந்த கமல் நாத்துக்கும் இடையிலான மோதல் காரணமாக காங்கிரசிலிருந்து சிந்தியா வெளியேறினார். இதனையடுத்து சிந்தியா ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 22 பேரும் தங்களது பதவியை ராஜினாமா செய்து விட்டு பா.ஜ.க.வில் இணைந்தனர். இதனால் மத்திய பிரதேசத்தில் கை கவிழ்ந்து தாமரை மலர்ந்தது. தற்போது முதல்வர் சிவ்ராஜ் சிங் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது.

பா.ஜ.க.வுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ…. மத்திய பிரதேசத்தில் காலியாகும் காங்கிரஸ் கூடாரம்
காங்கிரஸ்

மத்திய பிரதேசத்தில் காலியாக உள்ள 28 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நவம்பர் 3ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. பா.ஜ.க.வும், காங்கிரசும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழ்நிலையில் தமோ தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராகுல் லோதி எனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டு நேற்று முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்தார். ராகுல் லோதி தனது ராஜினாமா கடிதத்தை தற்காலிக சபாநாயகர் ரமேஷ்வர் ஷர்மாவிடம் அளித்தார். ராகுல் லோதியின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதாக ரமேஷ்வர் ஷர்மா டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க.வுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ…. மத்திய பிரதேசத்தில் காலியாகும் காங்கிரஸ் கூடாரம்
ராகுல் லோதி, ரமேஷ்வர் ஷர்மா

ராகுல் லோதி பா.ஜ.க. இணைந்தது தொடர்பாக செய்தியாளர்களிடம் கூறுகையில், சுமார் 14 மாதங்களாக காங்கிரசுடன் பணியாற்றினேன். ஆனால் வளர்ச்சிக்காக நான் பணியாற்றவில்லை. தமோவில் அனைத்து மக்கள் நல திட்டங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்று (நேற்று) நான் விருப்பத்துடன் பா.ஜ.க.வில் இணைந்தேன். தமோ புதிய உயரங்களை தொடும் என்று நான் நம்புகிறேன் என தெரிவித்தார். ராகுல் லோதி பா.ஜ.க.வில் இணைந்தது காங்கிரசுக்கு இடைத்தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.