சோனியா காந்திக்கு மீண்டும் ஒரு கடிதம்… பிரியங்கா காந்தியை மறைமுகமாக தாக்கிய முன்னாள் தலைவர்கள்

 

சோனியா காந்திக்கு மீண்டும் ஒரு கடிதம்… பிரியங்கா காந்தியை மறைமுகமாக தாக்கிய முன்னாள் தலைவர்கள்

காங்கிரசிலிருந்து வெளியேற்றப்பட்ட தலைவர்கள், பிரியங்கா காந்தியை மறைமுகமாக தாக்கி சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளனர்

காங்கிரஸ் கட்சியிலிருந்து கடந்த ஆண்டு வெளியேற்றப்பட்ட முன்னாள் எம்.பி. சந்தோஷ் சிங், முன்னாள் மாநில அமைச்சர் சத்யதேவ் திரிபாதி, எம்.எல்.ஏ.க்கள் வினோத் சவுத்ரி, பூதார் நரேன் மிஸ்ரா, நெக்சந்த் பாண்டே, சுவாயம் பிரகாஷ் கோசுவாமி மற்றும் சஞ்ஜீவ் சிங் ஆகியோர் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில் அவர்கள் கூறியிருப்பதாவது: மாநில விவகாரங்களுக்கு பொறுப்பானவர்களால் நிலவும் சூழ்நிலையை பற்றி உங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை என்ற அச்சம் உள்ளது.

சோனியா காந்திக்கு மீண்டும் ஒரு கடிதம்… பிரியங்கா காந்தியை மறைமுகமாக தாக்கிய முன்னாள் தலைவர்கள்
சோனியா காந்தி

எங்களை சட்டவிரோதமாக எங்களை கட்சியிலிருந்து வெளியேற்றியதற்கு எதிராக முறையிட்டோம், ஆனால் மத்திய ஒழுங்கு குழுவுக்கு கூட எங்களது கோரிக்கையை பரிசீலிக்க நேரம் கிடைக்கவில்லை. மாநிலத்தில் கட்சி பதவிகளை மாத சம்பளம் பெறுபவர்கள் ஆக்கிரமித்து உள்ளனர், கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் கூட அவர்கள் கிடையாது. அவர்கள் கட்சியின் சித்தாந்தத்தை நன்கு அறிந்திருக்கவில்லை. ஆனால் உத்தர பிரதேசத்தில் கட்சிக்கு வழிகாட்டும் பணியில் ஈடுபடுகிறார்கள். 1977-80களில் நெருக்கடி காலகட்டத்தில் பாறை போல் உறுதியாக காங்கிரசில் நின்ற தலைவர்களின் செயல்பாடுகளை அவர்கள் மதிப்பீடு செய்கிறார்கள். ஜனநாயக விதிமுறைகள் காற்றில் பறக்கவிடப்படுகின்றன, மூத்த தலைவர்கள் குறிவைக்கபபடுகின்றனர், அவமானப்படுத்துகின்றனர், வெளியேற்றப்படுகிறார்கள்.

சோனியா காந்திக்கு மீண்டும் ஒரு கடிதம்… பிரியங்கா காந்தியை மறைமுகமாக தாக்கிய முன்னாள் தலைவர்கள்
பிரியங்கா காந்தி

மாநில பிரிவின் புதிய கலாச்சாரத்தை பற்றி பேசும் ஊடகங்களிலிருந்து நாங்கள் வெளியேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மாநிலத்தில் நடைமுறையில் உள்ள விவகாரங்களில் தொடர்ந்து கண்ணை மூடி கொண்டு இருந்தால் ஒரு காலத்தில் கோட்டையாக இருந்த உத்தர பிரதேசத்தில் கட்சி வீழ்ச்சியை சந்திக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேச காங்கிரஸ் தற்போது பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா கட்டுப்பாட்டில் உள்ளது. அவர்தான் உத்தர பிரதேச மாநில விவகாரங்களை கவனித்து வருகிறார். ஆகையால் அவரைதான் மாநில விவகாரங்களுக்கு பொறுப்பானவர்களால் மாநில காங்கிரசில் நிலவும் சூழ்நிலையை சோனியா காந்திக்கு தெரிவிக்கப்படவில்லை என மறைமுகமாக அந்த தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளதாக கூறப்படுகிறது.