மகாராஷ்டிராவில் பா.ஜ.க.வுக்கு தாவும் முன்னாள் காங்கிரஸ் தலைவர் கிருபாஷங்கர் சிங்.. பா.ஜ.க.வில் இன்று இணைகிறார்..

மகாராஷ்டிராவில் பா.ஜ.க.வுக்கு தாவும் முன்னாள் காங்கிரஸ் தலைவர் கிருபாஷங்கர் சிங்.. பா.ஜ.க.வில் இன்று இணைகிறார்..

மகாராஷ்டிராவில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் கிருபாஷங்கர் சிங் இன்று தேவேந்திர பட்னாவிஸ் முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நம் நாட்டின் பாரம்பரியமிக்க கட்சியான காங்கிரஸ் தற்போது தேய்பிறை நிலவு போல் தேய்ந்து வருகிறது. நாடு முழுவதுமாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்கள் அந்த கட்சியிலிருந்து விலகி மாற்று கட்சிகளில் இணைந்து வருகின்றனர். இது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதனை தடுக்க காங்கிரஸ் முயற்சிகள் மேற்கொண்டாலும் அதற்கு எந்தவித பலனும் இல்லாதது போல் இருக்கிறது.

மகாராஷ்டிராவில் பா.ஜ.க.வுக்கு தாவும் முன்னாள் காங்கிரஸ் தலைவர் கிருபாஷங்கர் சிங்.. பா.ஜ.க.வில் இன்று இணைகிறார்..
காங்கிரஸ்

தற்போது மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கட்சியின் பிரபலமான தலைவர்களில் ஒருவரான கிருபாஷங்கர் பா.ஜ.க.வில் இணைய போவதாக தகவல் வெளியாகியுள்ளது. மும்பையில் உள்ள அம்மாநில பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் முன்னிலையில் இன்று அவர் பா.ஜ.க.வில் இணைய போவதாக தகவல். மகாராஷ்டிரா பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான மாதவ் பண்டாரி இந்த தகவலை உறுதி செய்தார்.

மகாராஷ்டிராவில் பா.ஜ.க.வுக்கு தாவும் முன்னாள் காங்கிரஸ் தலைவர் கிருபாஷங்கர் சிங்.. பா.ஜ.க.வில் இன்று இணைகிறார்..
பா.ஜ.க.

கிருபாஷங்கர் சிங் கடந்த சில ஆண்டுகளாகவே காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி இருந்து வந்தார். 2019 மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் அவர் காங்கிரசுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யவில்லை. மேலும் அந்த ஆண்டு அவர் தேவேந்திர பட்னாவிஸை சந்தித்து பேசினார். இதனையடுத்து அப்போதே அவர் பா.ஜ.க.வில் இணையபோவதாக செய்திகள் வெளியானது. ஆனால் அப்போது அது நடக்கவில்லை. இன்றுதான் அது நடக்கப்போகிறது. கிருபாஷங்கர் சிங் பா.ஜ.க.வில் இணைவது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.