ஆந்திர அரசு மருத்துவமனையில் நோயாளியின் சடலத்தை சாப்பிடும் நாய்கள்… சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு

ஆந்திர அரசு மருத்துவமனையில் நோயாளியின் சடலத்தை சாப்பிடும் நாய்கள்… சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு

தெலங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு ஆந்திர அரசு மருத்துவமனை நிர்வாகம் தொடர்பாக முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசை குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் டிவிட்டரில்: இது மனதை உலுக்கும்! பிரகசம் மாவட்டத்தில் உள்ள ஓங்கோல் அரசு மருத்துவமனையில் ஒரு நோயாளியின் சடலம் 2 நாட்களாக கவனிக்கபடாமல் இருந்துள்ளது. மேலும் அந்த சடலத்தை நாய்கள் குதறி மற்றும் சாப்பிட்டன இது சக நோயாளிகளிக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர அரசு மருத்துவமனையில் நோயாளியின் சடலத்தை சாப்பிடும் நாய்கள்… சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு

இது மனித கண்ணியத்தின் கடுமையான மீறல் மற்றும் ஆந்திர அரசாங்கத்தின் மிகப்பெரிய நிர்வாக தோல்வி. இதை கண்டிக்க நான் வார்த்தைகளை இழக்கிறேன். இவ்வாறு அதில் பதிவு செய்து இருந்தார். மேலும் அரசு மருத்துவமனையில் கவனிக்கப்படாமல் கிடக்கும் சடலம் தொடர்பான வீடியோவையும் டிவிட்டரில் பதிவேற்றம் செய்து இருந்தார்.

ஆந்திர அரசு மருத்துவமனையில் நோயாளியின் சடலத்தை சாப்பிடும் நாய்கள்… சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு

அதேசமயம் நாயுடுவின் குற்றச்சாட்டை ஓங்கோல் வட்ட ஆய்வாளர் பீமா நாயக் மறுத்துள்ளார். நோயாளி எம். ராதாகிருஷ்ணா ரெட்டி கடந்த 8ம் தேதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆகஸ்ட் 9-10ம் தேதிக்கு இடைப்பட்ட இரவில் அவர் மருத்துவமனையின் 3 தளத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து அதே மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதனைதொடர்ந்து நோயாளியின் உறவினர்களிடம் அன்று இரவே சலம் ஒப்படைக்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவு சடலத்தை உறவினர்கள் தங்களது இடத்துக்கு கொண்டு சென்றனர். அதனால் சடலத்தை நாய்கள் கடிக்கவோ அல்லது சாப்பிடவோ வாய்ப்பில்லை என தெரிவித்தார்.