• April
    06
    Monday

Main Area

Main



மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 72 ஆவது பிறந்தநாள்... பெண் குழந்தைகளின் பாதுகாப்பு தினமாக கடைப்பிடிப்பு!

ஜெயலலிதா
ஜெயலலிதா

மறைந்த முன்னாள் முதல்வர்  ஜெயலலிதாவின் பிறந்த நாள் இன்று தமிழகம் முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல பகுதிகளில் ஜெயலலிதாவின் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பின்னர் மக்களுக்கு அன்னதான நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. ஜெயலலிதாவின் பிறந்த நாளான இன்று பெண் குழந்தைகளின் பாதுகாப்பு தினமாக கடைப்பிடிக்கப் படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி  சட்டசபையில் அறிவித்திருந்தார். அதே போல அதற்கான அரசாணையும் நேற்று வெளியிடப்பட்டது. 

ttn

அதன் படி இன்று தமிழகம் முழுவதும் பாதுகாப்பு தினமாக கடைப்பிடிக்கப் பட்டு வருகிறது. முதல்வர் ஏற்கனவே அறிவித்ததன் படி இன்று மனிதச் சங்கிலி நிகழ்ச்சி, பேரணி மற்றும் கருத்தரங்கம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ttn

இன்று காலை சென்னை கோட்டைக்கு எதிரே உள்ள பொதுப்பணித்துறை வளாகத்தில் நடைபெற உள்ள குழந்தைகள் தின பாதுகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருக்கிறார். அதனைத்தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ் உள்ளிட்டோர் ஜெயலலிதா சிலைக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்த உள்ளனர். 

2018 TopTamilNews. All rights reserved.