‘பாஜக பெண் வேட்பாளரை ஐட்டம் என விமர்சித்த முன்னாள் முதல்வர்’ : நடிகை குஷ்பு கடும் கண்டனம்!

 

‘பாஜக பெண் வேட்பாளரை ஐட்டம் என விமர்சித்த முன்னாள் முதல்வர்’ : நடிகை குஷ்பு கடும் கண்டனம்!

மத்திய பிரதேச மாநில இடைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக பெண் வேட்பாளரை ஐட்டம் என முன்னாள் முதல்வர் கமல்நாத் விமர்சனம் செய்ததற்கு நடிகை குஷ்பு கண்டனம் தெரிவித்துள்ளார்.

‘பாஜக பெண் வேட்பாளரை ஐட்டம் என விமர்சித்த முன்னாள் முதல்வர்’ : நடிகை குஷ்பு கடும் கண்டனம்!

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தவர் இமார்தி தேவி. இவர் மத்திய பிரதேச மாநிலம் டப்ரா சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் தாப்ரா தொகுதியில் போட்டியிடவுள்ளார். அந்த வகையில் தாப்ராவில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரத்தில் பேசிய காங்கிரஸை சேர்ந்த முன்னாள் முதல்வர் கமல்நாத் பேசிய போது, இமார்தி தேவியை ஐட்டம் எனும் வார்த்தையை பயன்படுத்தி விமர்சித்தார். இதற்கு தேசிய பெண்கள் ஆணையம் கண்டனம் தெரிவித்தது. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி மௌனம் காப்பது ஏன்? என பாஜக மத்திய பெண் அமைச்சர் ஸ்மிரிதி இரானி கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ள நடிகை குஷ்பு, “இதுபோன்ற ஆண்களின் மனநிலை ஒருபோதும் மாறாது. ஒருபெண்ணை விமர்சிக்க அவரை தவறாக சித்தரிப்பதே ஆண்களின் மனநிலையாக உள்ளது. கமல்நாத்ஜி-யிடமிருந்து ஒருபோதும் இதை எதிர்பார்க்கவில்லை. தங்கள் தவறை மறைக்க ஆண்கள் அறிந்த ஒரேவழிமுறை இதுதானா? ஒரு பெண்ணை மதிக்க தெரியாத நீங்கள் எப்படி வாக்காளர்களை மதிப்பீர்கள் ” என்று பதிவிட்டுள்ளார்.

அத்துடன் ஒரு பெண்ணை ஐட்டம் என்று கூறியவரை மன்னிப்பு கேட்க சொல்ல அக்கட்சி தலைமை அறிவுறுத்தவில்லை. நான் காங்கிரசில் இருந்து விலகியது சரியானது தான் என்பதை அக்கட்சி மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது என்றும் கூறியுள்ளார்.