சென்னையில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் முன்னாள் இராணுவ அதிகாரி கைது!

சென்னையில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் முன்னாள் இராணுவ அதிகாரி கைது!

யானைக்கவுனியில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் முன்னாள் இராணுவ அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை யானைக்கவுனியில் கடந்த 11 ஆம் தேதி ஒரே குடும்பத்தைசேர்ந்த 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். தலில் சந்த் (74), மனைவி புஷ்பா பாய் (70) மகன் ஷீத்தல் (38) ஆகிய மூவரும் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து விசாரணையில் இறங்கிய போலீசார் குற்றவாளிகளை மகாராஷ்டிரா வரை சேசிங் செய்து பிடித்தனர்.

சென்னையில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் முன்னாள் இராணுவ அதிகாரி கைது!

உயிரிழந்தவர்களுள் ஒருவரான ஷீத்தலின் மனைவி ஜெயமாலா தான், திட்டமிட்டு இந்த கொலையை அரங்கேற்றினார் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. இதனால் ஜெயமாலாவின் சகோதரர் ராஜு ஷிண்டே, விகாஷ் உட்பட 3 பேர் அண்மையில் போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டனர். அதில் , ஜெயமாலாவுக்கு அவரது மாமனார் பாலியல் தொல்லை கொடுத்ததால் கொலையை அரங்கேற்றியதாக வாக்குமூலம் அளித்தனர்.

சென்னையில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் முன்னாள் இராணுவ அதிகாரி கைது!

இந்நிலையில் சென்னையில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் துப்பாக்கி கொடுத்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சேர்ந்த ராஜிவ் துபே போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தானில் இருந்து அழைத்து வந்து விசாரணை செய்த நிலையில், துப்பாக்கி, வாகனம் கொடுத்து உதவியதாக தனிப்படை போலீசார் கைது நடவடிக்கையை எடுத்துள்ளனர்.