திமுகவில் இணைந்தார் எஸ்எஸ்ஆர் மகனும் அதிமுக முன்னாள் எம்.பி.யுமான ராஜேந்திரகுமார்

 

திமுகவில் இணைந்தார் எஸ்எஸ்ஆர் மகனும் அதிமுக முன்னாள் எம்.பி.யுமான  ராஜேந்திரகுமார்

பழம்பெரும் நடிகர் எஸ்எஸ்ஆர் மகனும் முன்னாள் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜேந்திரகுமார் திமுகவில் இணைந்தார்.

திமுகவில் இணைந்தார் எஸ்எஸ்ஆர் மகனும் அதிமுக முன்னாள் எம்.பி.யுமான  ராஜேந்திரகுமார்

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தமிழக அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல்அறிக்கை ,பரப்புரை என தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுகவும் அதிமுகவும் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகின்றன.

திமுகவில் இணைந்தார் எஸ்எஸ்ஆர் மகனும் அதிமுக முன்னாள் எம்.பி.யுமான  ராஜேந்திரகுமார்

இந்த சூழலில் பழம்பெரும் நடிகர் எஸ்எஸ்ஆர் மகனும் முன்னாள் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜேந்திரகுமார் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார். முன்னதாக திமுகவின் முன்னாள் எம்.பி. கே.பி .ராமலிங்கம் தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி. ரவி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.

திமுகவில் இணைந்தார் எஸ்எஸ்ஆர் மகனும் அதிமுக முன்னாள் எம்.பி.யுமான  ராஜேந்திரகுமார்

இவர் திமுக தலைமைக்கு எதிராக கருத்து தெரிவித்ததின் எதிரொலியாக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் வேளையில் பலர் கட்சித் தாவல்களில் ஈடுபடுவது வழக்கமான ஒன்றுதான் என்பது குறிப்பிடத்தக்கது.