அதிமுக முன்னாள் எம்எல்ஏ-வுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை!!

 

அதிமுக முன்னாள் எம்எல்ஏ-வுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை!!

சொத்துகுவிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆர்.பி.பரமசிவத்திற்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1991 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டுவரை சின்னசேலம் அதிமுக எம்எல்ஏவாக இருந்தவர் ஆர்.பி.பரமசிவம். இவர் பதவியில் இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த 1997 ஆம் ஆண்டு அவர் வீட்டில் சோதனை நடத்தியது. இதில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கின.

அதிமுக முன்னாள் எம்எல்ஏ-வுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை!!

விசாரணையின் முடிவில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.28 லட்சத்து 76 ஆயிரம் மதிப்புள்ள சொத்து சேர்த்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து முன்னாள் எம்எல்ஏ பரமசிவம் மற்றும் அவர் மனைவி பூங்கொடி மீது கடந்த 1998 ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதை தொடர்ந்து இந்த வழக்கு விழுப்புரம் ஊழல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இதையடுத்து கடந்த 2017 ஆம் ஆண்டு பரமசிவத்தின் மனைவி பூங்கொடி உடல்நலக்குறைவால் இறந்துவிட இந்த வழக்கின் குற்றவாளியாக பரமசிவம் மட்டுமே எஞ்சினார்.

அதிமுக முன்னாள் எம்எல்ஏ-வுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை!!

இந்நிலையில் சொத்துகுவிப்பு வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த பரமசிவத்திற்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், 33 லட்சத்து 4 ஆயிரத்து 168 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராதம் கட்ட தவறினால் கூடுதலாக ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிபதி தீர்ப்பையடுத்து முன்னாள் எம்எல்ஏ பரமசிவம் விழுப்புரம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.