• July
    22
    Monday

Main Area

Main



அப்டியே வண்டியை ஓரம் கட்ட சொன்னால், இனி பயம் வேண்டாம்!

Traffic Police Checking
Traffic Police Checking
Loading...

இருசக்கர வாகனத்தில் வெளியே போய்விட்டு வீடு திரும்புவதற்குள் எத்தனை எத்தனை பிரச்னைகள்? ரோடு சரியில்லாமல் இருப்பது, ஆட்டோக்காரர்களை சமாளித்து ஓட்டுவது, சிக்னலை மதிக்காமல் செல்லும் சக ஓட்டுனர்களை நிந்திப்பது என ஏகப்பட்ட பிரச்னைகளோடு மற்றொரு முக்கிய பிரச்னை, ட்ராஃபிக் போலிஸ். போக்குவரத்து அதிகாரி முன்பாக எட்டு போட்டு லைசென்ஸ் எடுத்து வைத்திருந்தாலும், அதனை கையோடு எடுத்து செல்லவில்லை என்றால் ஏழரைதான். "சார், லைசென்ஸ் இருக்கு, இங்க இல்ல, வீட்டுல. மறந்துட்டு வந்துட்டேன்" என சொல்லி முடிப்பதற்குள் ஃபைன் போட்டு ரசீதை நீட்டிவிட்டு அடுத்த வண்டிக்கு சென்றுவிடுவார் காவலர். லைசென்ஸையோ ஆர்.சி.புக்கையோ மறந்துவிட்டீர்களா, இனி கவலையில்லை.

இதற்கான தீர்வுதான், எம் பரிவாஹன் எனும்  மத்திய அரசின் செயலி. இந்த செயலியை தரவிறக்கம் செய்து, ஒவ்வொருவரும் தங்களது வாகன பதிவு சான்றிதழ் (ஆர்.சி.), ஓட்டுனர் உரிமம் போன்றவற்றை டிஜிட்டல் முறையில் சேமித்து வைத்துக் கொள்ளலாம். இந்த செயலியை பிளேஸ்டோரில் இருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆவணங்களை இ-டாக்மென்ட்ஸாக வைத்திருப்பது விதிகளுக்கு உட்பட்டதே. எனவே, ஆவணங்களுக்குப் பதிலாக ஸ்மார்ட்போனில் இருந்து காண்பித்தாலே போதும்.

Traffic Police

சரி, இதற்கு என்ன வழிமுறை? விர்ச்சுல் டிரைவிங் லைசன்ஸ் மற்றும் ஆர்.சி. புத்தகத்தை டவுன்லோடு செய்ய, பயனர் தங்களது வாகன பதிவு எண் மற்றும் ஓட்டுனர் உரிமம் எண் மற்றும் பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை வைத்திருக்க வேண்டும். கூகுள் பிளே ஸ்டோரில், mparivahaan செயலியை தரவிறக்கம் செய்து, இன்ஸ்டால் செய்தபிறகு, வலதுபுறம் மேல்பக்கம் காணப்படும் மூன்று கோடுகளை க்ளிக் செய்ய வேண்டும்.

- சைன்-இன் ஆப்ஷனை க்ளிக் செய்து உங்களின் மொபைல் நம்பரை பதிவிட வேண்டும். பின் ஸ்மார்ட்போனிற்கு வரும் குறியீட்டு எண்ணை பதிவிட வேண்டும். - இவ்வாறு செய்ததும் ஆர்.சி. ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். - இனி வாகனத்தின் பதிவு எண் பதிவு செய்து தேட வேண்டும். - இனி செயலியை வாகன பதிவு எண்ணுடன் கொண்ட விவரங்களை தேடும். - அடுத்து Add to dasboard ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

Mparivaahan

விர்ச்சுவல் டிரைவிங் லைசன்ஸ் டவுன்லோடு செய்வது எப்படி? - செயலி ஹோம்ஸ்கிரீனில் இருக்கும் ஆர்.சி. டேபை க்ளிக் செய்ய வேண்டும். - இனி டிரைவிங் லைசன்ஸ் நம்பரை பதிவிட்டு தேட‌ வேண்டும். - செயலி டிரைவிங் லைசன்ஸ் உடன் இணைக்கப்பட்டு இருக்கும் விவரங்களை தரவிறக்கம் செய்யும். - இறுதியில் Add to dashboard ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். எல்லாம் தரவிறக்கம் செய்தாகிவிட்டதா? இனி எப்போது போக்குவரத்து காவலரோ அதிகாரியோ, வண்டியை நிறுத்தினால், உடனடியாக உங்கள் போனில் தரவிறக்கம் செய்த ஆவணங்களை அவர்களிடம் காட்டுங்கள்.

ஓ, என்னாது? போனை எடுத்துட்டு வர மறந்துட்டீங்களை? ரைட்டு, அப்டியே வண்டியை ஓரம் கட்டிட்டு வாங்க சார்!

2018 TopTamilNews. All rights reserved.