அக்டோபர் மாதம் வரை கடனுக்கான வட்டியை ரிசர்வ் வங்கியை குறைக்க வாய்ப்பில்லை… அடிச்சு சொல்லும் நிபுணர்கள்

அக்டோபர் மாதம் வரை கடனுக்கான வட்டியை ரிசர்வ் வங்கியை குறைக்க வாய்ப்பில்லை… அடிச்சு சொல்லும் நிபுணர்கள்

இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை ஆய்வு கூட்டம் 2 மாதங்களுக்கு ஒரு முறை நடைபெறும். அந்த கூட்டத்தில் முக்கிய கடனுக்கான வட்டி விகிதம் குறித்து முடிவு செய்யப்படும். இதனால் ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை கூட்டத்தின் முடிவுகளை அனைத்து தரப்பினரும் எதிர்பார்ப்பர். இந்நிலையில் இந்த நிதியாண்டில் ரிசர்வ் வங்கியின் 2வது நிதிக்கொள்கை கூட்டம் கடந்த 4ம் தேதி தொடங்கி நேற்று முடிவடைந்தது.

அக்டோபர் மாதம் வரை கடனுக்கான வட்டியை ரிசர்வ் வங்கியை குறைக்க வாய்ப்பில்லை… அடிச்சு சொல்லும் நிபுணர்கள்

கடந்த பிப்ரவரி முதல் இந்திய ரிசர்வ் வங்கி முக்கிய கடனுக்கான வட்டியை 1.15 சதவீதம் குறைத்துள்ளது. தற்போது ரெப்போ ரேட் 4 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ ரேட் 3.35 சதவீதமாகவும் உள்ளது. தற்போது சில்லரை விலை பணவீக்கம் அதிகமாக உள்ளது. மேலும் தொடர்ந்து அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ரிசர்வ் வங்கி நிதிக்கொள்கை ஆய்வு கூட்டத்தில் கடனுக்கான வட்டியை குறைக்காது என்றே பல்வேறு தரப்பினரும் எதிர்பார்த்தனர். ரிசர்வ் வங்கியும் கடனுக்கான வட்டியை குறைக்கவில்லை. இந்த சூழ்நிலையில் குறைந்தபட்சம் அக்டோபர் வரை ரிசர்வ் வங்கி கடனுக்கான வட்டியை குறைக்க வாய்ப்பில்லை என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அக்டோபர் மாதம் வரை கடனுக்கான வட்டியை ரிசர்வ் வங்கியை குறைக்க வாய்ப்பில்லை… அடிச்சு சொல்லும் நிபுணர்கள்

கோடக் மகிந்திரா வங்கியின் உபஸ்னா பரத்வாஜ் கூறுகையில், குறைந்தபட்சம் அக்டோபர் வரை ரிசர்வ் வங்கி கடனுக்கான வட்டியை குறைக்க வாய்ப்பில்லை என தெரிவித்தார். அக்குட் ரேட்டிங்ஸ் மற்றும் ரிசர்ச் நிறுவனத்தின் சுமன் சவுத்ரி கூறுகையில், ரெப்போ ரேட் கிட்டத்தட்ட மிகவும் குறைந்த அளவுக்கு வந்து விட்டது, அடுத்த 6 மாதங்களில் ரிசர்வ் வங்கி 0.25 சதவீதம் முதல் 0.50 சதவீதம் வரை குறைக்கவாய்ப்புள்ளது என தெரிவித்தார்.