நீலகிரியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை… அனைத்து துறை அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை!

 

நீலகிரியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை… அனைத்து துறை அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை!

நீலகிரி

நீலகிரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, நேற்று அனைத்து துறை அதிகாரிகளுடன் வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் ஆய்வு மேற்கொண்டார்.

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது குறித்த அனைத்து துறை அதிகாரிகளுடனான ஆய்வுகூட்டம் நேற்று வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் தலைமையில் நடைபெற்றது.

நீலகிரியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை… அனைத்து துறை அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை!

தமிழக அரசு விருந்தினர் மாளிகையில் நடந்த இந்த கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுப்ரியா சாஹு, ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான கூடுதல் ஆக்சிஜன் படுக்கைகள், சிகிச்சை மையங்கள் அமைப்பது குறித்தும், பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, உதகையில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டு உள்ள 6 கிலோ லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் கொள்கலனை வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மனோகரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.