கோவையில் ரயில் மோதி படுகாயமடைந்த யானைக்கு 2-வது நாளாக சிகிச்சை!

 

கோவையில் ரயில் மோதி படுகாயமடைந்த யானைக்கு 2-வது நாளாக சிகிச்சை!

கோவை

கோவை நவக்கரை அருகே ரயில்மோதி படுகாயம் அடைந்த காட்டுயானைக்கு, சாடிவயல் முகாமில் வைத்து 2ஆவது நாளாக வனத்துறையினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கோவை மாவட்டம் மதுக்கரை அருகேயுள்ள நவக்கரை வனப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு தண்டாவளத்தை கடக்க முயன்ற ஆண் காட்டுயானை மீது, அந்த வழியாக சென்ற சென்னை – திருவனந்தபுரம் விரைவு ரயில் மோதியது. இதில் இடுப்பு பகுதியில் பலத்த காயமடைந்த அந்த யானை தண்டவாளத்தின் அருகிலேயே நடக்க முடியாமல் படுத்திருந்தது.

கோவையில் ரயில் மோதி படுகாயமடைந்த யானைக்கு 2-வது நாளாக சிகிச்சை!

இதுகுறித்து ரயில் என்ஜின் ஓட்டுநர் அளித்த தகவலின் பேரில் நேற்று மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் தலைமையில் கால்நடை மருத்துவர்கள் குழு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று யானைக்கு வலி நிவாரணி மருந்து கொடுத்து, சிகிச்சை அளித்து வந்தனர். தொடர்ந்து நேற்று மாலை யானையை சாடிவயல் முகாமிற்கு வாகனம் மூலம் அழைத்துச்சென்ற வனத்துறையினர், அங்கு யானைக்கு தொடர்ந்து 2-வது நாளாக சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ரயில் மோதியதில் யானையின் முதுகு மற்றும் கால் எலும்புகளில் முறிவு ஏற்பட்டுள்ளதால் யானையின் பின் பகுதியை அசைக்க முடியாமல் தவித்து வருகிறது. இதனால், யானைக்கு தண்ணீர், தர்பூசணி, வெல்லம் உள்ளிட்ட உணவுகள் தொடர்ச்சியாக கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும், யானைக்கு ஏற்பட்டு உள்ள எலும்பு முறிவு குறித்து ஸ்கேன் செய்து பார்க்கவும் வனத்துறையினர் திட்டமிட்டு உள்ளனர்.