ஓணம் பண்டிகை: வெளிமாநில வியாபாரிகள் கேரளாவிற்குள் வந்து பூக்கள் விற்பனை செய்துகொள்ள அனுமதி

 

ஓணம் பண்டிகை: வெளிமாநில வியாபாரிகள் கேரளாவிற்குள் வந்து பூக்கள் விற்பனை செய்துகொள்ள அனுமதி

கேரளாவில் ஆகஸ்ட் 31ம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, வெளி மாநில பூ வியாபாரிகள் கொரோனா விதிமுறைகளை கடைப்பிடித்து கேரளாவிற்குள் வந்து பூக்கள் விற்பனை செய்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கேரளாவிற்குள் பூக்கள் கொண்டு வந்து விற்பனை செய்யும் வியாபாரிகள் தங்கள் பெயர் விபரங்களை கொடுத்து “இ பாஸ்” பெற்றுக்கொண்டு முறையான அனுமதி பெறுவதோடு, முகக்கவசம் அணிதல், இடையிடையில் கைகளை கிருமி நாசினி கொண்டு கழுவுதல் உள்ளிட்ட நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பூக்கள் விற்பனை செய்தபின் பூக்கள் கொண்டுவந்த கூடைகள் உபயோகம் முடிந்ததும் அழிக்க வேண்டும் என்றும் சமூக இடைவெளி கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கேரள அரசு அறிவுறுத்தியுள்ளது.

ஓணம் பண்டிகை: வெளிமாநில வியாபாரிகள் கேரளாவிற்குள் வந்து பூக்கள் விற்பனை செய்துகொள்ள அனுமதி

திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், “முடிந்த அளவு பணப்பரிவர்த்தனை தடுத்து டிஜிட்டல் பரிவர்த்தனையை மேற்கொள்ளுங்கள். பூக்களை வாங்கி பயன்படுத்துவோரும் கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார். முன்னதாக ஓணம் பண்டிகைக்கு கேரளாவிற்குள் பூக்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் முதல்வரின் இந்த அறிவிப்பு தமிழக பூ விவசாயிகளையும் பூ வியாபாரிகளையும் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.