’அமெரிக்க தேர்தலில் வெளிநாட்டு தலையீடா?’ உள்துறை அதிகாரி சொல்வது என்ன?

 

’அமெரிக்க தேர்தலில் வெளிநாட்டு தலையீடா?’ உள்துறை அதிகாரி சொல்வது என்ன?

அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார் என்ற முடிவு இழுத்துக்கொண்டே போகிறது. நேற்று முதன்நாள் அமெரிக்காவில் அதிபருக்கான வாக்குப் பதிவு நடந்தது. அதில், குடியரசுக் கட்சி சார்பாக தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப்-ம், ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பைடனும் போட்டியிட்டார்கள்.

வாக்குகளை எண்ணும் பணி நேற்று தொடங்கியது. வழக்கமாக, ஒரே நாளில் வாக்கு எண்ணிக்கை பெரும்பாலும் முடிக்கப்பட்டு அதிபர் யார் என்பது தெரிந்துவிடும். ஆனால், இம்முறை அது குழப்பம் நீட்டித்து வருகிறது.

’அமெரிக்க தேர்தலில் வெளிநாட்டு தலையீடா?’ உள்துறை அதிகாரி சொல்வது என்ன?

இந்நிலையில் அமெரிக்கத் தேர்தலில் மோசடி நடந்ததாக ட்ரம்ப் பகிங்கர குற்றச்சாட்டை முன்வைத்து நேற்று பேசினார். இதை எதிர்த்து நீதி மன்றம் செல்லவும் அவர் முடிவெடுத்திருக்கிறார்.

தேர்தல் பிரசாரத்தின் மீது ஜோ பைடன் மீது சீனாவின் ஆதரவாளர் எனும் முத்திரையைக் குத்த ட்ரம்ப் முயற்சி செய்தார். அதனால், அமெரிக்க தேர்தலில் வெளிநாடுகளின் தலையீடு இருக்குமோ என்ற சந்தேகத்தைப் பலரும் எழுப்பி வந்தனர். அதற்கான விளக்கத்தை அமெரிக்காவின் உள்துறையைச் சேர்ந்த சைபர் பிரிவின் தலைமை அதிகாரி வெளிப்படையாக அறிவித்துள்ளார்.

’அமெரிக்க தேர்தலில் வெளிநாட்டு தலையீடா?’ உள்துறை அதிகாரி சொல்வது என்ன?

அதில், “அமெரிக்காவில் எந்த நாட்டின் தலையீடும் இல்லை. அதேபோல தேர்தலில் அளிக்கப்பட்ட மக்களின் வாக்குகளை எண்ணுவதிலும் வேறு நாடுகள் குறுக்கிடாமல் தொடர்ந்து கண்காணிப்புடன் இருந்து வருகிறோம்’ என்று தெரிவித்திருக்கிறார்.