இந்தியாவில் ஆலைகளை இழுத்து மூடும் ஃபோர்டு கார் நிறுவனம் – 4,000 ஊழியர்கள் வேலையிழக்கும் அபாயம்!

இந்தியாவில் ஆலைகளை இழுத்து மூடும் ஃபோர்டு கார் நிறுவனம் – 4,000 ஊழியர்கள் வேலையிழக்கும் அபாயம்!

உலகளவில் மிகப் பிரபலமான கார் நிறுவனம் ஃபோர்டு மோட்டார். அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்திற்கு ஜெர்மனி, ஸ்பெயின், இங்கிலாந்து, இந்தியா என பல்வேறு உலக நாடுகளில் உற்பத்தி ஆலைகளும் கிளைகளும் உள்ளன. சமீபத்தில் லாபம் இல்லாத காரணத்தாலும் உற்பத்தியாகாத காரணத்தாலும் ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் ஆலைகளை மூடியது. இச்சூழலில் தற்போது இந்தியாவில் இதே காரணங்களால் ஆலையை மூட முடிவெடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.

இந்தியாவில் ஆலைகளை இழுத்து மூடும் ஃபோர்டு கார் நிறுவனம் – 4,000 ஊழியர்கள் வேலையிழக்கும் அபாயம்!

இதனால் 4,000 ஊழியர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நான்கில் ஒரு பங்கு கார் உற்பத்தி கூட நடைபெறவில்லை எனவும் லாபம் இல்லாமல் நஷ்டத்தை மட்டுமே சந்தித்து வந்ததாகவும் ஃபோர்டு நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ஆலைகளை மூடுவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் சொல்லியிருக்கிறது. இந்நிறுவனத்திற்கு சென்னை, குஜராத்தின் சனந்த் ஆகிய நகரங்களில் உற்பத்தி ஆலைகள் செயல்பட்டு வந்தன. உற்பத்தி செய்யப்பட்டு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஏற்றுமதி செய்யப்பட்டன.

இந்தியாவில் ஆலைகளை இழுத்து மூடும் ஃபோர்டு கார் நிறுவனம் – 4,000 ஊழியர்கள் வேலையிழக்கும் அபாயம்!

உற்பத்தியை நிறுத்திவிட்டு வெளிநாட்டிலிருந்து இறக்குமதியாகும் கார்களை மட்டும் விற்பனை செய்யவும் திட்டமிட்டுள்ளது. ஃபோர்டு இந்தியாவிலிருந்து வெளியேறும் மூன்றாவது வெளிநாட்டு நிறுவனமாகும். முன்னதாக அமெரிக்காவின் ஜெனரல் மோட்டர்ஸ், ஹார்லி-டேவிட்சன் ஆகிய மோட்டார் நிறுவனங்கள் இந்தியாவிலிருந்த உற்பத்தி ஆலைகளை இழுத்து மூடிச் சென்றன. இதுதொடர்பாக ஃபோர்டு நிறுவனத்தின் சிஇஓ ஜிம் ஃபார்லி கூறுகையில், “ஃபோர்டு பிளஸ் என்ற திட்டத்தின் அடிப்படையில் நீடித்த லாபகரமான வணிகத்தை ஏற்படுத்த நாங்கள் மிகக் கடினமான அதேசமயம் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

இந்தியாவில் ஆலைகளை இழுத்து மூடும் ஃபோர்டு கார் நிறுவனம் – 4,000 ஊழியர்கள் வேலையிழக்கும் அபாயம்!

இந்திய சந்தையில் கணிசமாக முதலீடு செய்தபோதிலும் எங்களால் லாபம் பார்க்க முடியவில்லை. லாபத்திற்குப் பதிலாக கடந்த 10 ஆண்டுகளில் 2 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.15 ஆயிரம் கோடி) நஷ்டம் மட்டுமே ஏற்பட்டுள்ளது. புதிய வாகனங்களுக்கான தேவை எங்களின் கணிப்பை விட மிகவும் குறைவாகவே உள்ளது. தேவைக்கு அதிகமாக உற்பத்தி செய்வதில் எந்தப் பயனும் இல்லை. இந்திய கார் சந்தையில் குறிப்பிடத்தகுந்த வளர்ச்சியும் ஃபோர்டு நிறுவனத்திற்கு இல்லை. அதனால் இம்முடிவை எடுக்க வேண்டிய சூழல் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது” என்றார்.

இந்தியாவில் ஆலைகளை இழுத்து மூடும் ஃபோர்டு கார் நிறுவனம் – 4,000 ஊழியர்கள் வேலையிழக்கும் அபாயம்!

ரூ.7.75 லட்சம் முதல் ரூ.33 லட்சம் வரையிலான விலையில் Figo, Aspire, Freestyle, EcoSport, Endeavour என்ற 5 மாடல்கள் கொண்ட காரை ஃபோர்டு நிறுவனம் தயாரித்து வந்தது. 350 ஏக்கரில் சென்னையிலும் 460 ஏக்கரில் சனந்திலும் பிளாண்ட்களை ஆரம்பித்து செயல்பட்டாலும் ஃபோர்டு நிறுவனத்தால் குறிப்பிடத்தகுந்த வளர்ச்சியைப் பெற முடியவில்லை. 1990-களில் இந்தியாவிற்குள் நுழைந்த ஃபோர்டு 20 ஆண்டுகளுக்குப் பிறகு நடையைக் கட்டுகிறது. உலகளவில் பிரபலமான ஃபோர்டு நிறுவனம் இந்திய கார் சந்தையில் வெறும் 1.57 சதவீதம் தான் ஷேர் வைத்துள்ளது.