• February
    28
    Friday

Main Area

Main



இந்தியாவில் போர்டு எகோஸ்போர்ட் பி.எஸ்.6 மாடல் கார் அறிமுகம் – விலை, சிறப்பம்சங்கள் உள்ளே!

eco sport
eco sport

டெல்லி: இந்தியாவில் போர்டு எகோஸ்போர்ட் பி.எஸ்.6 மாடல் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் போர்டு எகோஸ்போர்ட் பி.எஸ்.6 மாடல் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் இடம்பெற்றுள்ளது. புதிய சில அம்சங்களும் இந்த பி.எஸ்.6 மாடல் காரில் இணைக்கப்பட்டுள்ளன. ஹெச்.ஐ.டி ஹெட்லேம்ப், எல்.இ.டி டிஆர்எல், மழையை உணர்ந்து தானாக செயல்படும் வைப்பர்கள், 16 இன்ச் அலாய் வீல், டுயல் டோன் காரின் கூரை, டுயல் முன்பக்க ஏர்பேக், சீட் பெல்ட் ரிமைன்டர், ஆட்டோ டோர் லாக், ரியர் பார்க்கிங் சென்சார், ஹை ஸ்பீடு அலர்ட் சிஸ்டம் போன்ற மிக முக்கியமான அம்சங்கள் போர்டு எகோஸ்போர்ட் பி.எஸ்.6 மாடல் காரில் இடம்பெற்றுள்ளது.

இந்த புதிய மாடல் காரின் விலை ரூ.8.04 லட்சம் முதல் 11.58 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கியா மற்றும் ரெனால்ட் ஆகிய மாடல் கார்களுக்கு போட்டியாக போர்டு எகோஸ்போர்ட் பி.எஸ்.6 மாடல் கருதப்படுகிறது. இந்த காரில் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன், 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆகியவை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

2018 TopTamilNews. All rights reserved.