15 வயது சிறுமிக்கு நள்ளிரவில் கட்டாய திருமணம் : புகார் அளிக்க தைரியமாக காவல்நிலையம் வந்த சிறுமி!

15 வயது சிறுமிக்கு நள்ளிரவில் கட்டாய திருமணம் : புகார் அளிக்க தைரியமாக  காவல்நிலையம் வந்த சிறுமி!

வேலூரில் 15 வயது சிறுமிக்கு கட்டாயத் திருமணம் நடத்தி வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

15 வயது சிறுமிக்கு நள்ளிரவில் கட்டாய திருமணம் : புகார் அளிக்க தைரியமாக  காவல்நிலையம் வந்த சிறுமி!

வேலூர் மாவட்டம் காட்பாடி கழிஞ்சூரை சேர்ந்த 15 வயது சிறுமி விருதம்பட்டு காவல் நிலையம் சென்று நேரடியாக புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் எனக்கு குழந்தை திருமணம் செய்ய எனது வீட்டில் ஏற்பாடு செய்தார்கள். ஆனால் அதற்கு நான் மறுப்பு தெரிவித்தேன் நேற்றிரவு என் பாட்டி வீட்டில் நான் தூங்கிக் கொண்டிருக்கும் போது என் கைகளை கட்டிவிட்டு வலுக்கட்டாயமாக இரவு 11 மணிக்கு என் கழுத்தில் தாலி கட்டினார்கள். விடிந்த பிறகு நான் யாருக்கும் தெரியாமல் வந்துவிட்டேன். எங்கு சென்று புகார் அளிப்பது என்பது எனக்கு தெரியவில்லை. ஒரு முறை பள்ளியில் இருந்து விருதம்பட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அதனால் இங்கு புகார் அளிக்கலாம் என்று வந்தேன் என்று கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

15 வயது சிறுமிக்கு நள்ளிரவில் கட்டாய திருமணம் : புகார் அளிக்க தைரியமாக  காவல்நிலையம் வந்த சிறுமி!

இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக சமூக நலத் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் ஒருங்கிணைந்த சேவை மைய பணியாளர்கள் சிறுமியை காப்பகத்தில் ஒப்படைத்தனர்.இதுதவிர வேலூர் மாவட்டத்தில் மேலும் மூன்று சிறுமிக்கு கட்டாயத் திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் அதை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.