கொரோனா 3ஆம் அலை அலர்ட்- கடற்கரைக்கு செல்ல தடை

 

கொரோனா 3ஆம் அலை அலர்ட்- கடற்கரைக்கு செல்ல தடை

நாகை மாவட்டத்தில் உள்ள கடற்கரைகளுக்கு செல்வதற்கு தடை விதித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கொரோனா 3ஆம் அலை அலர்ட்- கடற்கரைக்கு செல்ல தடை

கொரோனா மூன்றாம் அலை எச்சரிக்கை காரணமாக சென்னையிலுள்ள உணவகங்கள் 50சதவீத இருக்கைகளுடன் செயல்படவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பல்வேறு மாவட்டங்களிலும் கோவில்களில் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நாகை மாவட்டத்தில் நாளை முதல் வரும் 9 ஆம் தேதி வரை கடற்கரை பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆடி அமாவாசையை முன்னிட்டு நாகை, வேதாரண்யம், கோடியக்கரை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் திதி கொடுக்க பொதுமக்கள் ஒன்று கூடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாகை நீலாயதாட்சி அம்மன் ஆலயம், எட்டுக்குடி முருகன் ஆலயம், நாகை சவுரி ராஜன் பெருமாள் ஆலயம், உள்ளிட்ட மாவட்டத்தின் முக்கிய கோவில்களில் ஆடி கிருத்திகை சிறப்பு தரிசனத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.