இந்த நேரத்தில் பாமக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை யாருக்காக?

 

இந்த நேரத்தில் பாமக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை யாருக்காக?

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ராமதாஸ் இப்போது ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில் உள் ஒதுக்கீடு குறித்த பல தகவல்களை அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், ’கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் எந்த ஒரு சாதிக்கும் இட ஒதுக்கீடு வழங்க அரசியலமைப்பு சட்டம் நிர்ணயித்துள்ள முதன்மைக் கூறு, அந்த சாதி சமூகத்திலும், கல்வியிலும் பின்தங்கியிருக்கிறது என்பதை கணக்கிடக் கூடிய புள்ளிவிவரங்களுடன் நிரூபிக்க வேண்டும் என்பது தான்.

இந்த நேரத்தில் பாமக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை யாருக்காக?

ஒரு தொகுப்பாகத் தான் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்…. தனித்தனி சாதிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படக் கூடாது என்று அரசியலமைப்புச் சட்டத்தில் எந்த இடத்திலும் தெரிவிக்கப்படவில்லை. இந்த அடிப்படை உண்மையை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்!

கேரளத்தில் ஈழவர்களுக்கு 14%, இஸ்லாமியர்களுக்கு 12%, லத்தீன் கிறித்தவர்களுக்கு 4%, நாடார்களுக்கு 2%, கிறித்தவ மதத்திற்கு மாறிய தலித்துகளுக்கு 1%, தீரவர்களுக்கு 1%, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 3%, விஸ்வகர்மாக்களுக்கு 3% என BC ஒதுக்கீடு சாதி அடிப்படையில் தான் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

இந்த நேரத்தில் பாமக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை யாருக்காக?

கேரளம் ஏன்…. தமிழகத்தில் கூட பட்டியலின மக்களில் அருந்ததியர் சமூகத்தின் சமூக, கல்வி நிலை மோசமாக இருப்பதால் அந்த சாதிக்கு 3% உள் ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அவ்வாறு உள் ஒதுக்கீடு வழங்குவது செல்லும் என்று உச்சநீதிமன்றமும் தீர்ப்பளித்திருக்கிறது’
என்றெல்லாம் அந்த அறிக்கையில் ராமதாஸ் குறிப்பிட்டிருக்கிறார்.

ஆனால், இந்த நேரத்தில் மருத்துவர் ராமதாஸ் ஏன் இந்த அறிக்கையை வெளியிட்டார் என்பதே பலரின் கேள்வியாக இருக்கிறது.

அறிக்கையில் தொடக்கத்தில் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கெடுப்பவர்களுக்கான விழிப்புணர்வுக்கு எனக் கூறியிருக்கிறார். ஆனால், இது தங்களை கூட்டணிக்கு அழைப்பவர்களுக்கான விளக்கமாகவும் இதைப் புரிந்துகொள்ள முடியும்.

இந்த நேரத்தில் பாமக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை யாருக்காக?

பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வன்னியர்களுக்கான 20 சதவிகித இடஒதுக்கீட்டை கோரி வந்துள்ளது. இப்போதும் அதிமுக கூட்டணியில் நீடிக்க ஒரு நிபந்தனையாக உள் ஒதுக்கீடாக வன்னியருக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று வற்புறுத்துவதாகக் கூறபடுகிறது. ஒருவேளை அந்த கோரிக்கையை சட்டக்காரணங்களால் தள்ளிப்போட நினைத்தால் அதற்கு முன்கூட்டியே பதில் சொல்வதைப் போல இருக்கட்டும் என நினைத்திருக்கலாம்.

மாறாக, திமுக தரப்பில் பாமகவை அழைக்கும் எண்ணம் இருந்தால், அவர்களும் வன்னியர் உள் ஒதுக்கீடு தொடர்பாக தீர்மானமாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த அறிக்கை என்றும் கூறப்படுகிறது. ஏனெனில், திமுகவின் துரைமுருகனுக்கு நெருக்கமான ஆட்கள் மூலம் பாமகவை நெருங்குவதாகவும் தகவல்கள் கசிகின்றன.