“கொரோனா தடுப்பூசி யாருக்கு?” விரைவில் கையேடு – அமைச்சர் விஜயபாஸ்கர்

“கொரோனா தடுப்பூசி யாருக்கு?” விரைவில் கையேடு – அமைச்சர் விஜயபாஸ்கர்

மத்திய அரசு அனுமதித்தால், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள தயார் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

“கொரோனா தடுப்பூசி யாருக்கு?” விரைவில் கையேடு – அமைச்சர் விஜயபாஸ்கர்

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி நாளை முதல் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. தமிழகத்தில் முதற்கட்டமாக சென்னையில் 12 இடங்கள், கோவையில் 4 இடங்கள், மதுரையில் 5 இடங்கள், திருச்சியில் 5 இடங்கள், சேலத்தில் 7 இடங்கள் முதற்கட்டமாக 166 இடங்களில் தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட உள்ளது. இதில் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை மற்றும் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைகளில் உள்ள மையங்களை பிரதமர் மோடி நாளை காணொலி காட்சி மூலம் திறக்கவுள்ளார்.

“கொரோனா தடுப்பூசி யாருக்கு?” விரைவில் கையேடு – அமைச்சர் விஜயபாஸ்கர்

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “கொரோனா தடுப்பூசியை யாரெல்லாம் போடலாம், போடக்கூடாது என விரைவில் கையேடு வெளிவரும். மக்களுக்கு நம்பிக்கை வரவில்லை எனில் சுகாதாரத் துறை ஒப்புதல் பெற்று நானே தடுப்பூசி போட்டுக் கொள்வேன். அனுமதி பெற்ற முன்கள பணியாளர்களுக்கு மட்டுமே தற்போது தடுப்பூசி போடப்படுகிறது. தமிழகத்தின் தலைசிறந்த 10 மருத்துவர்கள் கூறும் தடுப்பூசி போட்டுக்கொள்ள உள்ளனர்” என்றார்.

“கொரோனா தடுப்பூசி யாருக்கு?” விரைவில் கையேடு – அமைச்சர் விஜயபாஸ்கர்

முன்னதாக தமிழகத்திற்கு 5.56 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டது. இதில் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு 5.36 லட்சமும் , பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசிகள் 20 ஆயிரமும் கொண்டு வரப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசிகள் முதற்கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப்பணியாளர்கள், காவலர்கள் என முன்கள பணியாளர்களுக்கு செலுத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.