எல்லாம் தேர்தல் படுத்தும்பாடு.. 2 வாரத்தில் 2வது முறையாக இன்று அசாம், மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி

எல்லாம் தேர்தல் படுத்தும்பாடு.. 2 வாரத்தில் 2வது முறையாக இன்று அசாம், மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி

இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் இன்று பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

அசாம் மற்றும் மேற்கு வங்கம் மாநிலங்களில் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அசாமில் தற்போது பா.ஜ.க. ஆட்சி கட்டிலில் உள்ளது. மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது. இந்த மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தல்களில் எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்று பா.ஜ.க. தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது.

எல்லாம் தேர்தல் படுத்தும்பாடு.. 2 வாரத்தில் 2வது முறையாக இன்று அசாம், மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி
பாரத் பெட்ரோலியம்

கடந்த திங்கட்கிழமையன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் கூட இந்த மாநிலங்களுக்கு சிறப்பு கவனிப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைக்க உள்ளார். 2 வாரத்தில் இரண்டாவது முறையாக பிரதமர் மோடி அந்த மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லாம் தேர்தல் படுத்தும்பாடு.. 2 வாரத்தில் 2வது முறையாக இன்று அசாம், மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி
இந்தியன் ஆயில்

மேற்கு வங்கத்தில் அரசு நிறுவனமான பாரத் பெட்ரோலியம் ரூ.1,100 கோடி முதலீட்டில் கட்டியுள்ள லிக்யூட்பீல்டு பெட்ரொலியம் கியாஸ் இறக்குமதி முனையத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். மேலும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஹால்டியா சுத்திகரிப்பு நிலையத்தின் இரண்டாவது வினையூக்கி-ஐசோ-டி வாக்ஸிங் பிரிவுக்கு மோடி அடிக்கல் நாட்டுகிறார். மேலும் அசாமிலும் சில முக்கிய அடிப்படை கட்டமைப்பு பணிகளை பிரதமர் மோடி ஆரம்பித்து வைக்கிறார்.