தமிழகத்தில் முதன்முறையாக டூ வீலர்கள் செல்வதற்காக தனி டிராக்! செயல்பாட்டுக்கு வந்தது!

தமிழகத்தில் முதன்முறையாக டூ வீலர்கள் செல்வதற்காக தனி டிராக்! செயல்பாட்டுக்கு வந்தது!

தமிழகத்தில் முதன்முறையாக இருசக்கரவாகனங்கள் செல்வதற்காக தனி டிராக் – பரீட்சார்த்தமுறையில் செயல்பாட்டுக்கு வந்தது.

தமிழகத்தில் முதன்முறையாக டூ வீலர்கள் செல்வதற்காக தனி டிராக்! செயல்பாட்டுக்கு வந்தது!

தமிழகத்தின் மத்திய பகுதியாக விளங்கும் திருச்சி மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் இருசக்கர வாகன விபத்துக்கள் அதிகரிக்கும் பட்சத்தில் இருசக்கர வாகனங்கள் மட்டும் தனியே பயணிக்கும் வகையில் தமிழகத்தில் முதன்முறையாக ட்ராக் ஏற்படுத்தப்படும் என்று மாநகர காவல் ஆணையர் லோகநாதன் கடந்த ஆகஸ்ட்-7ம் தேதியன்று அறிவித்திருந்தார்.

தமிழகத்தில் முதன்முறையாக டூ வீலர்கள் செல்வதற்காக தனி டிராக்! செயல்பாட்டுக்கு வந்தது!

அதன்படி திருச்சி மாநகரில் 3, 4 சாலைகளில் இது முதலில் அமைக்கும் பணி நடைபெறுவதாக தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து முதற்கட்டமாக திருச்சி தலைமைத் தபால்நிலையம் முதல் நீதிமன்றம் வரையிலான சாலையில் இடதுபுறமாக இருசக்கர வாகனங்கள் மட்டும் செல்லும் வகையில் மஞ்சள் – வெள்ளைநிற கோடுகள் வரையப்பட்டு அதனுள் இருசக்கர வாகனங்கள் பயணிக்கவும் போக்குவரத்துக் காவலர்களால் ஒலிப்பெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டு அந்த டிராக் வழிகாக தற்போது இருசக்கர வாகனங்கள் சென்றுவருகின்றன.

தமிழகத்தில் முதன்முறையாக டூ வீலர்கள் செல்வதற்காக தனி டிராக்! செயல்பாட்டுக்கு வந்தது!

பரீட்சார்த்த முறையில் தற்போது தொடங்கப்பட்ட இந்த இருசக்கர வாகனங்களுக்கான தனிடிராக் வரவேற்பைப் பொறுத்து தில்லைநகர், கரூர் சாலை மற்றும் மேலப்புலிவார் ரோடு பகுதிகளில் இதனை விரிவாக்கம் செய்யப்படும் என்றும் அதனைத் தொடர்ந்து மாநகரப்பகுதிகளில் உள்ள சாலைகளில் இந்த நடைமுறை விரிவுபடுத்தப்படும் என்று போலீசார் தெரிவிக்கின்றனர்.

தமிழகத்தில் முதன்முறையாக டூ வீலர்கள் செல்வதற்காக தனி டிராக்! செயல்பாட்டுக்கு வந்தது!

ஆனால் இருசக்கர வாகன ஓட்டிகள், இருசக்கர வாகனத்திற்காக போடப்பட்ட கோட்டு பகுதியில் செல்லாமல் சாலையின் மற்ற பகுதிகளிலும் செல்வதால் இதற்கு போதிய விழிப்புணர்வை மாநகராட்சி நிர்வாகமும், மாநகர காவல்துறையினரும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.