ஒருநாளில் அதிக நேரம் உட்கார்ந்திருப்பவரா? இந்த விஷயங்கள் உங்களுக்குத்தான்!

 

ஒருநாளில் அதிக நேரம் உட்கார்ந்திருப்பவரா? இந்த விஷயங்கள் உங்களுக்குத்தான்!

’அங்கே இங்கே அலைந்துகொண்டிருக்காமல் ஒரு இடத்தில் உட்கார்ந்து செய்யும் வேலையாக இருந்தால் நல்லது’ பொதுவாக வீட்டில் உள்ள பெரியவர்கள் இப்படிச் சொல்வதைக் கேட்டிருப்போம். உண்மைதான் பல இடங்களுக்கு அலைந்து திரிவதில் பல ரிஸ்க் இருக்கத்தான் செய்கின்றன. இல்லையென்று மறுக்க முடியாது. அதுவும், தற்போது கொரோனா நோய்த் தொற்று பரவி வரும் நிலையில் பல இடங்களுக்கு அலையும் வேலையில் ஆபத்துகளும் இருக்கின்றன.

அதற்காக ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்வதிலும் ஆபத்து இருக்கிறதே…. நான் சொல்வது வேலையில் உள்ள ஆபத்தைப் பற்றிய அல்ல… ஒரு நாளில் அதிக நேரம் உட்கார்ந்திருப்பதால் வரும் ஆபத்தைப் பற்றியே சொல்கிறேன்.

ஒருநாளில் அதிக நேரம் உட்கார்ந்திருப்பவரா? இந்த விஷயங்கள் உங்களுக்குத்தான்!

ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதால் உடலில் கலோரி எரிக்கப்படுவது பெருமளவு குறைகிறதாம். அதனால், உங்களின் எடை அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. அதிக நேரம் உட்கார்ந்திருப்பதால் எலும்புகள் பலவீனமடையும் வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. அதனால், விரைவில் சோர்வடைந்துவிடுவீர்கள். அதேபோல நோய் எதிர்ப்புச் சக்தியும் அதிக நேரம் உட்கார்ந்திருப்பதால்  குறைந்துவிடலாம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் என்னென்ன உடல்நலப் பிரச்சனைகள் வரும் எனத் தனியே சொல்ல வேண்டியதில்லை.

நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதால் தசை பிடிப்பு ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. கால் மரத்துப்போவது அடிக்கடி நடக்கும். அதேபோது முதுகு வலி, கழுத்து வலிகள் வரும் சூழல் அதிகரிக்கிறது. அமெரிக்க ஆய்வு ஒன்றின்படி, அதிக நேரம் உட்கார்ந்திருப்பவர்களுக்கு இதய பிரச்சனைகள் வர வாய்ப்பிருப்பதாகச் சொல்லியிருக்கிறது.

ஒருநாளில் அதிக நேரம் உட்கார்ந்திருப்பவரா? இந்த விஷயங்கள் உங்களுக்குத்தான்!

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது ஒருநாள் முடிவில் ரொம்ப சோர்வாகவே உணர்வார்கள். சரி, இதிலிருந்து மீள என்னென்ன செய்யலாம்?

மாடிகளில் ஏறுவதற்கு லிஃப்ட்டைப் பயன்படுத்தாமல் படிகளில் ஏறிச் செல்லலாம். நான்காவது ஐந்தாவது மாடியில் அலுவலகம் எனில் எப்படிச் செல்வது எனக் கேட்பவர்கள், முதல் இரண்டு மாடிகள் படிகளிலும் மற்ற மாடி ஏற லிஃப்ட்டையும் பயன்படுத்தலாம்.

ஒருநாளில் அதிக நேரம் உட்கார்ந்திருப்பவரா? இந்த விஷயங்கள் உங்களுக்குத்தான்!

தினமும் நடைப்பயிற்சி செல்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். எவ்வளவு தூரம் செல்ல முடியுமா அவ்வளவு தூரம் அதிகமாகச் செல்லுங்கள். உடற்பயிற்சிகள் செய்யவில்லை எனில், சரியான பயிற்சியாளரின் வழிகாட்டலில் காலை அல்லது மாலையில் உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். இவை கலோரி எரிக்க உதவும்.

ஏதேனும் வாங்குவதற்கு கடைகளுக்குச் செல்ல வேண்டியிருந்தால், சற்று தூரமாக இருந்தாலும் நடந்து செல்லுங்கள். உதாரணத்திற்கு இரண்டு கிலோமீட்டர் சுற்றளவுக்குள் இருக்கும் இடங்களுக்கு நடந்தே செல்லுங்கள்.

ஒருநாளில் அதிக நேரம் உட்கார்ந்திருப்பவரா? இந்த விஷயங்கள் உங்களுக்குத்தான்!

அலுவலக நேரங்களில் எவ்வளவு நேரம் உட்கார்ந்திருப்பதைத் தவிர்க்கலாம் என்று பாருங்கள். ஆபிஸ் கேண்டினில் டீ, காபி குடிக்கச் செல்லும்போது உட்காரமால் நின்றபடி குடிக்கலாம்.  நண்பர்கள் யாராவது சந்திக்க வந்தால் வெளியே நடந்துகொண்டே உரையாடலாம்.  

அலுவகங்களில் நடக்கும் மீட்டிங், கலந்துரையாடலில் நின்றுகொள்ளும் விதமாக அமைத்துக்கொள்ள முடியுமா என்று சோதித்துப் பாருங்கள். இது உங்களுக்கு மட்டுமல்ல உங்களின் அலுவலக நண்பர்களுக்கும் உதவியாக இருக்கும்.

ஒருநாளில் அதிக நேரம் உட்கார்ந்திருப்பவரா? இந்த விஷயங்கள் உங்களுக்குத்தான்!

யோகா செய்ய விருப்பம் இருந்தால் அதற்கு உரிய பயிற்சியாளரின் வழிகாட்டலில் உங்களின் வேலையைக் கூறி அதற்கேற்ற ஆசனங்களைச் செய்யலாம்.

ஆபிஸில் உட்காரும்போது முதுகு தண்டுவடம் வளையாமல் நேராக உட்காருவதைப் பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். அதேபோல அரை மணி அல்லது ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை எழுந்து சில மீட்டர்கள் நடந்து செல்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். உதாரணமாக, ஐம்பது மீட்டர் தூரத்தில் உள்ள குடிநீரைக் குடிக்கச் செல்வது போல.

ஒருநாளில் அதிக நேரம் உட்கார்ந்திருப்பவரா? இந்த விஷயங்கள் உங்களுக்குத்தான்!

உட்கார்ந்து வேலை செய்வதில் இவ்வளவு பிரச்சனைகளா என்று சோர்ந்துவிட வேண்டும். உடற்பயிற்சியும் சரியான உணவுப்பழக்கமும் உங்களுக்கு நிச்சயம் உதவும்.