கால்பந்து வீரர் மாரடோனா காலமானார்!

 

கால்பந்து வீரர் மாரடோனா காலமானார்!

பிரபல கால்பந்து வீரர் மாரடோனா மருத்துவமனையில் காலமானார். 60 வயதாகும் அவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அர்ஜென்டினா நாட்டை சேர்ந்த அவர் உலகம் முழுவதும், கால்பந்து ரசிகர்களால், கால்பந்து கடவுள் என போற்றப்பட்டவர் . அர்ஜென்டினா கால்பந்து அணியின் பயிற்சியாளராகவும் இருந்தார்.

கால்பந்து வீரர் மாரடோனா காலமானார்!

கடந்த சில ஆண்டுகளாக விளையாட்டில் இருந்து ஒதுங்கியிருந்த அவர், அளவுக்கதிகமான மதுப்பழக்கம் மற்றும் மன அழுத்தம் காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மாரடோனா இறப்புக்கு கொரோனா தொற்று காரணமல்ல என, சிகிச்சை அளித்த மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.