கொரோனா நோயாளிகள் தவிர்க்க வேண்டிய உணவுகள்!

 

கொரோனா நோயாளிகள் தவிர்க்க வேண்டிய உணவுகள்!

கொரோனா நோயாளிகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, இழந்த ஆற்றலைப் பெற அதிக ஊட்டச்சத்து மிக்க உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள், ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். குறிப்பாக வைட்டமின் சி, டி, துத்தநாகம் (ஜிங்க்) உள்ள உணவுகள் மற்றும் புரதச்சத்தை எடுத்துக்கொள்ளும்படி பரிந்துரைக்கின்றனர்.

கொரோனா நோயாளிகள் தவிர்க்க வேண்டிய உணவுகள்!

என்ன எடுக்கலாம் என்ற விழிப்புணர்வு ஓரளவுக்கு எல்லோரிடமும் உள்ளது. ஒவ்வொருவரும் என்ன என்ன மூலிகை, உணவு என்று பெரிய லிஸ்டே போட்டுவிடும் அளவுக்கு பலவற்றைத் தெரிந்து வைத்துள்ளனர். ஆனால், எதை தவிர்ப்பது என்பது பற்றிய விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது. கொரோனா நோயாளிகள் தவிர்க்க வேண்டிய உணவுகள் பற்றி பார்ப்போம்…

கொரோனா நோயாளிகள் அதிக உப்பு (சோடியம்) உள்ள உணவுகளைத் தவிர்க்க வேண்டும். மேலும் சர்க்கரை, உணவு சுவையூட்டிகள், பதப்படுத்திகள் கலந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். இவை எல்லாம் நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கக் கூடிய உணவுகள்.

கொரோனா காலத்தில் புரதச்சத்து கிடைக்க அசைவ உணவுகள் எடுத்துக்கொள்ளப் பரிந்துரைக்கின்றனர். ஆனால் மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி போன்ற ரெட் மீட்-களை தவிர்ப்பது நல்லது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இதில் சாச்சுரேட்டட் கொழுப்பு அதிகமாக உள்ளது. மேலும் இன்ஃபிளமேஷன் எனப்படும் வீக்கத்தை அதிகரிக்கச் செய்கிறது. புரதச்சத்து கிடைக்க மீன், பயிறு வகைகள் போன்றவற்றையும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் கிடைக்க அவகேடோ, ஆலிவ் எண்ணெய் போன்றவற்றையும் எடுக்கலாம்.

கொரோனா பாதிப்பு காலத்தில் எண்ணெய்யில் பொரிக்கப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும். இத்தகைய உணவுகள் ஏற்கனவே அதிக வேலைப்பளுவால் அவதியுறும் நோய் எதிர்ப்பு சக்தியை மேலும் பாதிப்படையச் செய்துவிடும். எண்ணெய்யில் நன்கு பொரிக்கப்பட்ட உணவுகள் நம்முடைய வயிற்றில் வாழும் நுண்ணுயிர் காலணியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கெட்ட கொழுப்பு அதிகரித்து இதய நோய் வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கச் செய்கிறது.

கார்பனேட்டட் – சர்க்கரை அதிக அளவு உள்ள குளிர்பானங்களைத் தவிர்க்க வேண்டும். இவை உடல் முன்னேற்றம் அடைவதைத் தாமதப்படுத்தும். அதே போல் அதிக காரம், மசாலா உள்ள உணவுகளைத் தவிர்க்க வேண்டும். அதிக காரம், மசாலா பொருட்கள் தொண்டையில் அழற்சியை ஏற்படுத்தலாம்.