இதெல்லாம் ஃபிரிட்ஜில் வைக்க கூடாத உணவுகள் : உஷார் மக்களே…!

 

இதெல்லாம் ஃபிரிட்ஜில் வைக்க கூடாத உணவுகள் : உஷார் மக்களே…!

இன்று அனைவரது வீட்டிலும் இருக்கும் ஒரு பொருள் என்றால் அது ஃபிரிட்ஜ். குளிர்சாதன பெட்டி என்று அழைக்கப்படும் ஃபிரிட்ஜை பலரது வீட்டிலும் பயன்படுத்தாமல் இருப்பதே கிடையாது. நாம் வாங்கும் பல பொருட்கள் இப்போது ஃபிரிட்ஜில் தான் உள்ளது. அதை பிரிட்ஜில் வைக்கலாமா? கூடாதா என்பதே தெரியாமல் ஃபிரிட்ஜில் அடுக்கி வைத்துக் கொள்கிறோம். கேட்டால் அப்போது தான் கெட்டுப்போகாது என்று விளக்கம் வேறு. உண்மையில் எந்த பொருட்களை பிரிட்ஜில் வைக்கலாம் எந்த பொருட்களை வைக்க கூடாது என்பதை பற்றி இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்!

இதெல்லாம் ஃபிரிட்ஜில் வைக்க கூடாத உணவுகள் : உஷார் மக்களே…!

நீர்ச்சத்து நிறைந்த பழங்களை ஃபிரிட்ஜில் வைக்கக்கூடாது. குறிப்பாக தர்பூசணி , கிர்னி பழம், மெலாம் பழம் போன்ற பழங்கள் அறையின் வெப்பநிலையையே தாங்க கூடியவை தான். அதனால் அதை ஃபிரிட்ஜில் வைக்க வேண்டிய அவசியம் இல்லை. அதோடு இயற்கை வெப்பநிலையில் இருக்கும்போது தான் அதன் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாக இருக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அதேபோல் ஃபிரிட்ஜில் வைக்கவே கூடாத மற்றொரு பொருள் வெங்காயம். வெங்காயம் காற்றோட்டமானஇடங்களில் தான் வைக்க வேண்டும். அப்போது அது அழுகிப்போகாமல் நீண்ட நாட்கள் உபயோகிக்க கூடியதாக இருக்கும். ஃபிரிட்ஜில் வைத்தால் எளிதில் வெங்காயம் அழுகி விடும் என்பதே முக்கிய காரணம். அடுத்தது பிரெட். பிரெட்டை ஃபிரிட்ஜில் வைப்பதன் மூலம் அது ஈரப்பதம் காணாமல் போய் வறண்டு போய்விடும்.

இதெல்லாம் ஃபிரிட்ஜில் வைக்க கூடாத உணவுகள் : உஷார் மக்களே…!

அதேபோல் துளசி , ரோஸ்மெரி அல்லது மற்ற எந்த மூலிகை இலைகளையும் ஃபிரிட்ஜில் வைக்கக் கூடாது. அப்படி வைக்கும் பட்சத்தில் அதன் மருத்துவகுணம் போய் , பயன்படுத்தினாலும், உபயோகம் இல்லாததாக மாறிவிடும். தேவைப்பட்டால் துணியில் சுற்றி ஒரு டப்பாவில் வைக்கலாம். தேனை ஃபிரிட்ஜில் வைப்பது அதன் சுவை மற்றும் மருத்துவ குணங்களை நீக்கிவிடும். அதனால் முடிந்தவரை வெளிச்சம்படாத இடத்தில் வைப்பது நல்லது.

இதெல்லாம் ஃபிரிட்ஜில் வைக்க கூடாத உணவுகள் : உஷார் மக்களே…!

அதேபோல் அவகடோவை ஃபிரிட்ஜில் வைப்பதன் மூலம் அதன் சுவை குறைந்துவிடும். அத்துடன் நமக்கு நன்கு பரிட்சயமானவர்களின் வீட்டுக்கு போனால் கூட சிலர் உருளைக்கிழங்கை ஃபிரிட்ஜில் இருந்து எடுப்பதை பார்க்க முடிகிறது. இது செய்ய கூடாத ஒன்று. மாவுச்சத்து கொண்ட உருளை, குளிர்ந்த வெப்பநிலையால் அதன் மாவுச்சத்தை இழந்து சர்க்கரையாக மாற்றுகிறது. இதனால் அது கெட்டுப்போகவும் வாய்ப்புண்டு.

இதெல்லாம் ஃபிரிட்ஜில் வைக்க கூடாத உணவுகள் : உஷார் மக்களே…!

குறைந்த அளவில் பாதாம், பிஸ்தா, முந்திரி போன்ற பருப்புவகைகளை வாங்கினால் அதற்கு காற்று ஃபிரிட்ஜி தேவையில்லை. அதை காற்று புகாதவாறு டப்பாவில் வைத்துக்கொள்ளலாம் . அதிக அளவில் நட்ஸ் வாங்கிவிட்டீர்கள் என்றால் அது நீண்ட மாதங்களுக்கு தாங்க ஃபிரிட்ஜில் வைக்கலாம். அடுத்தது பலரும் செய்யும் தவறு சாக்லெட்டை ஃபிரிட்ஜில் வைப்பது. இப்படி செய்யும் போது, அதன் சுவை மற்றும் நிறம் மாறி விடும். அதனால் இதையும் முடிந்தளவு தவிர்க்கலாம்.