நிச்சய உடல் நல பாதிப்பை ஏற்படுத்தும் சில உணவுகள்!

 

நிச்சய உடல் நல பாதிப்பை ஏற்படுத்தும் சில உணவுகள்!

ஆரோக்கியமான உணவுகள் எது என்று ஓரளவுக்கு தெரிந்து வைத்துள்ளோம். ஆரோக்கியமில்லாத உணவு, சாப்பிட்டால் நிச்சயம் உடல்நல குறைபாட்டை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ள சில உணவுகள் பற்றித் தெரியுமா… தினமும் நாம் எடுத்துக்கொள்ளும் இந்த ஆரோக்கியமற்ற உணவுகள் பற்றித் தெரிந்துகொள்வோம்.

நிச்சய உடல் நல பாதிப்பை ஏற்படுத்தும் சில உணவுகள்!

பதப்படுத்தப்பட்ட உணவுகள்:

பாக்கெட்டி அடைக்கப்பட்ட ரெடிமேட் உணவுகள், நொருக்குத்தீனி எல்லாமே உடலுக்கு கெடுதல்தான். நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்க இந்த உணவுகளில் ரசாயனங்கள், உப்பு அதிக அளவில் சேர்க்கப்படுகிறது. அது உடல் நலத்துக்கு நிச்சயம் கேடு விளைவிக்கும். இந்த உணவுகளில் சோடியம் அளவு அதிகமாக இருக்கிறது. இது இதய பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்குக் காரணமாகிவிடுகிறது.

துரித உணவுகள்:

துரித உணவுகளும் அதிக சுத்திகரிக்கப்பட்ட, பக்குவப்படுத்தப்பட்ட உணவாகவே உள்ளது. அதிக சுத்தப்படுத்தல் அல்லது பதப்படுத்தல் என்பது ரசாயனங்களால் செய்யப்படுகிறது. அதிக சுத்திகரிக்கப்பட்ட மைதா, சர்க்கரை, எண்ணெய் போன்றவற்றில் ஊட்டச்சத்துக்கள் துளியும் இல்லை. தொடர்ந்து இந்த உணவுகளை உட்கொள்ளும்போது இதய நோய், ஆர்த்ரைடிஸ், மன அழுத்தம், அல்சைமர், புற்றுநோய் என பல்வேறு பாதிப்புகள் வரலாம்.

சர்க்கரை

உடலின் 1ம் நம்பர் எதிரி சர்க்கரையும் உப்பும். அதிக அளவில் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை எடுத்துக்கொள்வது உடல் பருமன், சர்க்கரை நோய், இதய நோய்க்கு வழிவகுக்கிறது. சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை எடுத்துக்கொள்வது நம்முடைய கல்லீரல், கணையம் மற்றும் செரிமான மண்டலங்கள் அதிக அளவில் வேலையை வாங்குகிறது. எனவே, சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையைத் தவிர்த்துப் பழுப்பு சர்க்கரை, தேன் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.

பழச்சாறு

பழச்சாறு ஆரோக்கியமானது என்று பலரும் நினைத்துக்கொண்டிருக்கின்றனர். பழத்தைக் கடித்துச் சாப்பிடுவதுதான் சிறந்தது. முடியாதவர்கள் மட்டுமே சர்க்கரை சேர்க்காமல் பழச்சாறாக அருந்தலாம்.

நிச்சய உடல் நல பாதிப்பை ஏற்படுத்தும் சில உணவுகள்!

எண்ணெய்யில் பொரித்த உணவுகள்

இயற்கை முறையில் பெறப்பட்ட எந்த ஒரு எண்ணையும் ஆரோக்கியமானதுதான். அதைச் சூடுபடுத்தும்போது அதன் தன்மை மாறி உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. மிகவும் நல்லது எனப்படும் ஆலிவ், நல்லெண்ணெய்யாக இருந்தாலும் கூட அதை சூடுபடுத்தும்போது அதன் தன்மை மாறுகிறது. எனவே, எண்ணெய்யில் அதிக அளவில் பொரித்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

அப்பளம், ஊறுகாய்

அப்பளத்தில் அதிக அளவில் உப்பு சேர்க்கப்படுகிறது. எண்ணெய்யில் பொரித்துச் சாப்பிடும்போது கொழுப்பு சேருகிறது. இது உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல பாதிப்புகளுக்கு வழிவகுத்துவிடும். ஊருகாயில் அதிக அளவில் உப்பு உள்ளது. அது ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும், சிறுநீரகத்தை பாதிக்கும். சிறுநீரக செயலிழப்பு பாதிப்பு உள்ளவர்கள் அப்பளம், ஊறுகாயைத் தொடவேக் கூடாது!