மூட்டு வலி வந்து வீட்டுக்குள்ளே முடங்காமலிருக்க இதெல்லாம் சாப்பிடுங்க

 

மூட்டு வலி வந்து வீட்டுக்குள்ளே முடங்காமலிருக்க இதெல்லாம் சாப்பிடுங்க

இன்று இருக்கும் வாழ்க்கை முறையில் 60 வயதுக்கு மேல் வந்த வியாதிகள் எல்லாம் இன்று 30வயதிலேயே வந்து விடுகிறது .அதுவும் மூட்டு வலியால்  இன்று பல இளைஞர்கள் முதல் முதியோர் வரையிலும் அவதிப்படுகின்றனர் .அதை தவிர்க்க சிறு வயது முதலே இந்த உணவுகளை எடுத்து கொள்ளுங்கள் 

மூட்டு வலி வந்து வீட்டுக்குள்ளே முடங்காமலிருக்க இதெல்லாம் சாப்பிடுங்க
Closeup young woman sitting on sofa and feeling knee pain and she massage her knee at home. Healthcare and medical concept.

கடல் உணவுகளில் அதிகமான அளவில் ஒமேகா-3 உள்ளது. அதிலும் சாலமன் மீனில் அளவுக்கு அதிகமாகவே உள்ளது. ஆகவே இதனை அடிக்கடி உண்ணும் உணவில் சேர்த்து வந்தால், மூட்டுகளில் ஏற்படும் வலிகள் குறைந்து, சரியாகிவிடும்.

ஸ்ட்ராபெர்ரி மற்றும் ப்ளுபெர்ரி பழங்கள் மூட்டுகளில் ஏற்படும் வலிகளுக்கு சிறந்தது என்று அமெரிக்கன் கல்லூரியில் உள்ள நியூட்ரிசன் டிபார்ட்மெண்ட் மேற்கொண்ட ஆய்வில் தெரிவித்துள்ளது. ஏனெனில் அவற்றில் மூட்டுகளில் ஏற்படும் வலி மற்றும் புண்களை சரிசெய்யுமளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன.  உடலில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் குறைவாக இருந்தால், மூட்டு வலிகள் ஏற்படும். ஆகவே அவற்றை சரிசெய்ய அதிக அளவில் காய்கறிகளான கீரை, ப்ராக்கோலி, வெங்காயம், இஞ்சி போன்றவற்றை சாப்பிட வேண்டும்.

சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளான பாஸ்தா, பிரட், ஜங்க் ஃபுட் போன்றவற்றை தவிர்த்தால், மூட்டு வலிகள் ஏற்படாமல் தடுக்கலாம். நட்ஸ் பாதாம், வால்நட் மற்றும் மற்ற விதைகளான பூசணிக்காய் விதை போன்றவற்றை சாப்பிட்டால் நல்லது. ஏனெனில் இவற்றில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகமாக உள்ளது.

உடலில் எலும்புகள் நன்கு ஆரோக்கியத்துடன் இருக்க, கால்சியம் சத்துக்கள் தேவை . அவை குறைவாக இருந்தால், அடிக்கடி எலும்புகளில் வலிகள், சுளுக்குகள் ஏற்படும். ஆகவே அத்தகைய வலிகள் வராமல் இருக்க பால் பொருட்களான வெண்ணெய், பால், சீஸ் போன்றவைகளை அதிகம் உடலில் சேர்க்க வேண்டும்.

ஆகவே மேற்சொன்ன உணவுகளை எடுத்து ,மூட்டு வலி வராமலும் ,வந்தவர்கள் அந்த வலியால் அதிகம் அவதிப்படாமலும் ஆரோக்யமாய் இருங்கள்.