சர்க்கரை நோய் இருக்கா… அப்போ கட்டாயம் இதை எல்லாம் நீங்க சாப்பிடக் கூடாது!

 

சர்க்கரை நோய் இருக்கா… அப்போ கட்டாயம் இதை எல்லாம் நீங்க சாப்பிடக் கூடாது!

சர்க்கரை நோய் வந்துவிட்டால் சில உணவுகளைத் தவிர்ப்பது, உடற்பயிற்சி செய்வது, வாழ்க்கை முறையில் சில மாறுபாடுகளை செய்வது அவசியமாகிறது. சர்க்கரை நோய் வந்துவிட்டது என்பதற்காக எந்த ஒரு உணவையும் தவிர்க்க வேண்டும் என்று இல்லை. ஆசைக்காக கொஞ்சமாக எடுத்துக்கொள்வதில் எந்த தவறும் இல்லை. ஆனால், அதிக அளவில் தினசரி எடுப்பது என்பது ஆபத்தை ஏற்படுத்திவிடும். அப்படிப்பட்ட உணவுகள் பற்றி பார்ப்போம்!

சர்க்கரை நோய் இருக்கா… அப்போ கட்டாயம் இதை எல்லாம் நீங்க சாப்பிடக் கூடாது!

குளிர்பானங்கள், ஜூஸ் போன்றவற்றை சர்க்கரை நோயாளிகள் எடுத்துக்கொள்ளக் கூடாது. இவற்றில் அதிகப்படியான சர்க்கரை இருக்கும் என்பதால் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிவேகமாக உயர்த்திவிடும். இதற்கு பதில் பழங்களை கடித்து சாப்பிடலாம்.

பட்டை தீட்டப்பட்ட அரிசி, மைதா, பேக்கரி உணவுகள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். பட்டை தீட்டப்பட்ட வெள்ளை அரிசியில் நார்ச்சத்து இருக்காது. சாப்பிட்ட உடனேயே சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்துவிடும். இதற்கு பதில் நார்ச்சத்து நிறைந்த பழுப்பு, சிவப்பு அரிசியை எடுத்துக்கொள்ளலாம்.

ஃபிரெஞ்ச் ஃபிரை போன்ற எண்ணெய்யில் பொறிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை எடுக்கக் கூடாது.

வெள்ளை சர்க்கரையைத் தவிர்க்க வேண்டும். வெள்ளை சர்க்கரையால் தயாரிக்கப்பட்ட இனிப்பு, உணவு, பானங்களும் தவிர்க்கப்பட வேண்டியவைதான்.

உலர் பழங்களும் தவிர்க்க வேண்டிய ஒன்றுதான். சர்க்கரை நோயாளிகளுக்கு பழங்கள் நல்லதுதான். அதிலும் பழங்களில் உள்ள வைட்டமின் சி உள்ளிட்ட சத்துக்கள் நன்மையே செய்யும். ஆனால், பழங்களை உலர்த்தும்போது அதில் உள்ள சர்க்கரையின் அளவு செறிவு அதிகரிக்கிறது. எனவே, உலர் பழங்கள் எடுக்க வேண்டாம்.

மாம்பழம், சப்போட்டா, பலாப்பழம் போன்ற இனிப்பு சுவை அதிகம் உள்ள பழங்களை தவிர்ப்பது நல்லது. இவை ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்துவிடும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு சாச்சுரேட்டட் கொழுப்பு ஏற்றது இல்லை. அது கிடைக்கும் கொஞ்சநஞ்ச இன்சுலிக்கும் வேட்டு வைத்துவிடலாம். எனவே, முழு கொழுப்பு உள்ள பால் எடுத்துக்கொள்ளக் கூடாது. கொழுப்பு நீக்கப்பட்ட பாலை அருந்தலாம்.

இவற்றுக்கு பதிலாக நார்ச்சத்து நிறைந்த முழு தானியம், காய்கறிகள், பழங்கள் எடுத்துக்கொள்வது சர்க்கரை அளவு ரத்தத்தில் அதிகரிப்பது கட்டுப்படுத்தப்படும்.