ஜிஎஸ்டி வரம்புக்குள் ஸ்விக்கி, சொமட்டோ… தாறுமாறாக எகிற போகும் ஹோட்டல் பில்!

 

ஜிஎஸ்டி வரம்புக்குள் ஸ்விக்கி, சொமட்டோ… தாறுமாறாக எகிற போகும் ஹோட்டல் பில்!

நாம் நேரடியாக ஹோட்டலுக்கே சென்று சாப்பிட்டுவிடலாமோ என்ற எண்ணத்தை ஆன்லைன் மூலம் வரும் உணவுகளின் விலை வரவழைத்துவிடும். நேரே சென்று சாப்பிட்டால் 120 ரூபாய் என்று இருக்கும். அதே உணவு ஆன்லைன் மூலம் வரும் பட்சத்தில் ஜிஎஸ்டி வரி, டெலிவரி சார்ஜ் ஆகியவற்றை உள்ளடக்கி 150 அல்லது 160 ரூபாய் வரை கொண்டுவந்து விட்டு விடுவார்கள் ஹோட்டல்காரர்கள். இவர்கள் நம்மிடம் வாங்கி அரசிடமும் வரியை முறையாகச் செலுத்துவதில்லை.

ஜிஎஸ்டி வரம்புக்குள் ஸ்விக்கி, சொமட்டோ… தாறுமாறாக எகிற போகும் ஹோட்டல் பில்!

2020- 2021 நிதியாண்டில் மட்டும் ஹோட்டல்கள் ரூ.2 ஆயிரம் கோடி வரை வரி ஏய்ப்பு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக ஸ்விக்கி, ஸோமேட்டோ மூலம் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறி இந்த மோசடி அரங்கேறியுள்ளது. ஆகவே இதனைத் தடுக்கும் பொருட்டு சேவை என்ற அடிப்படையில் ஸ்விக்கி, சொமட்டோ உள்ளிட்ட ஆன்லைன் உணவு விநியோக நிறுவனங்களையும் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர மத்திய நிதியமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. முன்பு விநியோகம் என்ற சேவையை வழங்கும் நிறுவனங்கள் என்பதால் அவற்றுக்கு வரி விதிக்கப்படாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜிஎஸ்டி வரம்புக்குள் ஸ்விக்கி, சொமட்டோ… தாறுமாறாக எகிற போகும் ஹோட்டல் பில்!

நாளை மறுநாள் லக்னோவில் நடைபெறவுள்ள 45ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்தக் கூட்டத்திற்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமை தாங்குகிறார். உணவுகளுக்கு மட்டுமல்லாமல் உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்களுக்கும் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட உள்ளதால் ஆன்லைன் மூலம் வாங்கும் உணவுப் பொருட்களின் விலை தாறுமாறாக உயர்வதற்கும் வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இதேபோல பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவரவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.