முருக்கைகாய் பாசிப் பருப்பு கஞ்சி-ஆரோக்கியமான கமகமக்கும் சூப்பர் பிரேக்ஃபாஸ்ட்! பேச்சிலர் சமையல் :-1

முருக்கைகாய் பாசிப் பருப்பு கஞ்சி-ஆரோக்கியமான கமகமக்கும் சூப்பர் பிரேக்ஃபாஸ்ட்! பேச்சிலர் சமையல் :-1

பேச்சிலரா இருக்கிற ஆட்களுக்கு ஆகாத ஒரு விசயம்  என்றால் சமைக்கிறதுதான். நாலஞ்சு பேரா இருந்தால் பேசிக்கிட்டே சமைக்கிறது ஜாலியா இருக்கும்.தனி ஆளா,தனியொரு மனுஷனுக்கு ,மனுசிக்கு சமைக்கிற கொடுமை நம்மளோட  எதிரிகளுக்கு கூட வரக்கூடாதுன்னு ஆளா நீங்க இருந்தால் இந்த சமையல் குறிப்பு உங்களுக்கானதுதான்.

இப்போ நாம  சொல்லப்போற பிரேக் ஃபாஸ்ட்ட  செய்யறதுக்கு ரொம்ப செலவாகாது! அதுக்காக அரை வயிறுக்கும்  பத்தாத சமையலா இருக்குமோன்னு பயப்படவேண்டியதில்லை! ஷார்ட் டைம்ல அட்டகாசமான சமையல் செய்யுறது எப்படின்னு பார்க்கலாம்.

paasi parupu

இந்த சமையலுக்கு ஒரே ஒரு குக்கர் மட்டும் போதும்.தேவையான பொருட்கள்
அரிசி -2 கப், தோல் நீக்கி உடைத்த பாசிப்பருப்பு- 1 கப், தேங்காய் துருவல் – 2 ஸ்பூன், பச்சை மிளகாய் -4 (இரண்டாகக் கீறியது), பூண்டு -4 பல்,வெந்தயம் -1/2 ஸ்பூன்,சீரகம்- ½ ஸ்பூன். இதோடு இரண்டு முருங்கை காய்களை இரண்டங்குல நீளமுள்ள துண்டுகளாக வெட்டி குக்கரில் போடவும்.

பிறகு எட்டுக் கப்  தண்ணீர் விட்டு,தேவையான அளவு உப்பு போட்டு குக்கரை மூடி அடுப்பில் வைத்து ஆறு விசில் விடவும்.ஆவி அடங்கியபின் குக்கரைத் திறக்கும் போது வரும் வாசனையே உங்களை மயக்கி குக்கரை காலி செய்யும்  மனநிலைக்கு வந்துவிடுவீர்கள்.இதை மூன்று பேர் சாப்பிடலாம்.டேஸ்ட்டைப் பொறுத்து நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள். 

இதற்கு,தேங்காய் பொட்டுக்கடலை சட்னி,ஆம்லெட்,ஏதாவது ஒரு ஊறுகாய் போன்ற பக்கவாத்தியங்களை சேர்த்துக்கொள்வது  உங்ககள் வசதியை பொறுத்தது!ஆனால் இவை ஏதும் இல்லாமலே இந்த கஞ்சி உங்கள் காலை வேளையை உற்சாகமாக்கிவிடும்.

ஒரு முறை செய்து பாருங்கள். இந்த கஞ்சி இன்றைய பேச்சிலர்களுக்கு மட்டுமல்ல முதியோருக்கும் ஏற்றதென்பது புரியும்.