• July
    22
    Monday

Main Area

முட்டையுடன் இதையெல்லாம் கண்டிப்பா சாப்பிடாதீங்க...!

பால், தண்ணீர் என்று எல்லாவற்றிலுமே கலப்படம் வந்து விட்டது. குழந்தைகளின் ஆரோக்கியத்திற்காக அசைவ உணவு என்று ஆசையாசையாய் சமைத்து தருகிறோம். சுவைக்காகவும், சத்துக்காகவும், ஆரோக்கியத்திற்காகவும், எளிதில் சமைக்க முடிவதாலும் பல சமயங்களில் காலை உணவிலும், இரவு நேர உணவிலும் கூட முட்டையைச் சேர்த்துக் கொள்கிறோம். முட்டை ஆரோக்கியமான உணவு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் சாப்பிடத் தெரியாமல் முட்டையுடன் சேர்த்து வேறு சில பொருட்களையும் சேர்த்தோ, முட்டைக்கு பிறகோ சாப்பிட்டால் பல பிரச்சனைகளை நாமே வெற்றிலை பாக்கு வைத்து அழைப்பது போல் ஆகிவிடும். அதனால், முட்டை எப்பொழுது சாப்பிட்டாலும் இந்த பொருட்களை எல்லாம் தவிர்த்து விடுங்கள். 

egg

பொதுவாக உணவு உட்கொண்ட பின்னர் பழங்களைச் சாப்பிடுவது ஆரோக்கியமான விஷயம் கிடையாது. அதிலும் முட்டை சாப்பிட்ட பிறகு ஆப்பிள், பேரிக்காய், திராட்சை போன்ற பழங்களை நிச்சயமாக சாப்பிடக் கூடாது. இந்த பழங்களில் அதிகளவில் புரோட்டீன்கள் இருக்கிறது. எந்த பழங்களாக இருந்தாலும் 15 நிமிடத்தில் செரிமானம் அடைந்து விடும். ஆனால் முட்டை செரிமானம் அடைய நேரம் எடுத்துக்கொள்ளும். இரண்டையும் ஒரே நேரத்தில் சாப்பிடுவது செரிமான மண்டலத்திற்கு நல்லதல்ல. இதனால் குமட்டல், வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு போன்றவற்றுடன் கடுமையான இரைப்பை அழற்சிக்கும் ஆளாக நேரிடும்.

egg

ஒரே நாளில் குழந்தையை புஷ்டியாக்குகிறேன் என்று சிலர் காலை நேரத்திலேயே முட்டையைக் கொடுத்து விட்டு, கூடவே சோயா பாலையும் குடிக்க கொடுப்பார்கள். சோயா பால் சத்து நிறைந்தது தான். முட்டையும் ஆரோக்கியமான உணவு தான். ஆனால், முட்டையுடன் சோயா பால் நிச்சயமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முட்டைகளில் உள்ள புரதம் சோயா பாலில் உள்ள டிரிப்சினுடன் இணையும் என்பது அவர்களுக்குத் தெரியாது. இது உடல்களில் சிதைவு பிரச்சினையை ஏற்படுத்துவதுடன் நமது உடல் புரோட்டின் உறிஞ்சுவதை தடுக்கிறது. 
பொதுவாகவே அசைவ உணவை உட்கொண்ட பிறகு டீ குடிக்கும் பழக்கம் நம்மில் பலருக்கும் இருக்கிறது. ஆனால் நீங்கள் முட்டை சாப்பிட்ட பிறகு டீ குடிப்பது ஆரோக்கியமான  செயல் கிடையாது. காரணம்,  தேயிலையில் இருக்கும் டானிக் அமிலம் முட்டையில் இருக்கும் புரோட்டினுடன் சேர்வது நமது உடலுக்கு பல ஆபத்துக்களை உண்டாக்கும். மேலும் இதனால் நமது குடல் இயக்கங்கள் பாதிப்பதுடன் நமது உடலில் தேங்கும் நச்சுப்பொருட்களின் அளவும் அதிகரிக்கும். 

egg

உருளைக்கிழங்கில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் முட்டையில் இருந்து கால்சியம் மற்றும் இரும்புச்சத்தை நமது உடல் உறிஞ்சுவதை தடுக்கிறது. இந்த இரண்டு பொருட்களையும் ஒரே உணவில் சேர்ப்பது தவறாகும். இப்படி இரண்டையும் ஒரே நேரத்தில் உட்கொள்வதால் இரண்டில் இருந்துமே ஒரு சத்தும் கிடைக்காது. தவிர, இவற்றால் செரிமானக் கோளாறுகள் ஏற்படும்.

ttnnewsdesk Sat, 07/20/2019 - 16:43
egg how to eat eggs Health tips முட்டை உணவு

English Title

don't eat these dish with egg

News Order

0

Ticker

0 
பருப்பு உருண்டைக் குழம்பு

பருப்பு உருண்டைக் குழம்பு

தேவையான பொருட்கள் கடலைப்பருப்பு        - 1/4கிலோ தேங்காய்துருவல்        - 1கப் இஞ்சி                    - சிறிய துண்டு பூண்டு                    - 3பல் மஞ்சள் தூள்            ...


முளைகட்டிய பயறு

 முளைகட்டிய பயறு இடியாப்பம்

தேவையான பொருட்கள் முளைகட்டிய பயறு    - 1கப் இடியாப்ப மாவு        - 2கப் பெரிய வெங்காயம்    - 1 தக்காளி                - 1 குடமிளகாய்            - 1(சிறியது) மிளகாய்த்தூள்    ...


Ginger tea caution

யாரெல்லாம் இஞ்சி டீயை தவிர்க்க வேண்டும்?

அல்சர், சிறுகுடல் பாதிப்பு உள்ளவர்கள் இஞ்சி டீ பக்கமே வராமல் இருப்பது நல்லது. இஞ்சி டீ அதிகமாகும்போது நாக்கில் அரிப்பு, வாய்ப்புண், மற்றும் வயிற்றெரிச்சல் (இல்லயில்ல, பக்கத்து வீட்...


Clay pot cooking

அப்ப‌டி என்ன ஸ்பெஷல் மண்பாண்டங்களில் சமையல் செய்யும்போது?

மண்பாண்டங்கள் உணவில் உள்ள அமிலத் தன்மையை சமன்படுத்தும் தன்மை கொண்டவை. மிக முக்கியாக, மண்பாண்டச் சமையல் அதிக எண்ணெயைக் கோராது. எப்பவுமே இல்லாட்டியும் எப்பயாச்சும் ஒருமுறையாச்சும் மண...பலாப்பழ பொரியல்

பலாப்பழ பொரியல்

தேவையான பொருட்கள் பலாச்சுளைகள்      - 10 பலாக்கொட்டை  - 10 பச்சை மிளகாய்  - 3 பெரிய வெங்காயம் - 2 கேரட்                - 2 மிளகாய்தூள்   - 2டீஸ்பூன் மஞ்சள் தூள்     - 1/2டீஸ...சுக்குமல்லி குழம்பு

சுக்குமல்லி குழம்பு

என்ன தான் நாம் பார்த்து பார்த்து வீட்டில் உள்ளவர்களுக்கு ஆரோக்கியமாக சமைத்துக் கொடுத்தாலும், வெளியில் நண்பர்களுடன் சேர்ந்து பள்ளியில் குழந்தைகளும், அலுவலகத்தில் கணவரும் எதையாவது சா...கார வடை

கார வடை

தேவையான பொருட்கள் பச்சரிசி - 400கி உளுந்தம் பருப்பு - 100கி புழுங்கலரிசி - 25கி வற்றல் - 3 பெருங்காயம், உப்பு, கடலை எண்ணெய் – சிறிதுசெட்டிநாட்டு பால் பணியாரம்

செட்டிநாட்டு பால் பணியாரம்

தேவையான பொருட்கள் பச்சரிசி - 1கப் உளுத்தம் பருப்பு - 1கப் தேங்காய் - 1 சர்க்கரை - 3கப் ஏலக்காய் - சிறிதளவு எண்ணெய் - பொரிக்க


கம்பு புட்டு

எலும்புகளை பலமாக்கும் கம்பு புட்டு

தேவையானவை கம்பு மாவு    -2கப் வெல்லம்    -ஒன்றரை கப் தேங்காய்துருவல்    -1கப் முந்திரிப் பருப்பு    -5 நெய்    -3டீஸ்பூன் ஏலக்காய்த்தூள்    -1டீஸ்பூன்


பாகற்காய்

குடல் புழுக்களை அழிக்கும் பாகற்காய்

பாகற்காய் என்று பெயரில் மட்டும் தான் இது காய். மற்றபடி இது  பழ வகையைச் சேர்ந்தது. அதுவும் கசப்பான பழம். இதன் சத்துக்கள் முழுமையாகக் கிடைப்பதற்கு  அப்படியே ஜூஸாக்கி சாப்பிடுவது தான்...


 கம்பு வடை

உடலை பலமாக்கும் கம்பு வடை

சிறுதானியங்களில் கம்புக்கு நிகர் கம்பு தான். காலையில் கூழாகவோ, களியாகவே தயார் செய்து கொடுத்தால், குழந்தைகள் சாப்பிட மறுப்பார்கள். அதனால், மாலை சிற்றுண்டியாக, கம்பில் வடை தயார் செய்...

  
 தேநீர்

எந்த நேரத்தில் எப்படி தேநீர் குடிக்கலாம் … அட்டகாசமான ஐடியா!

நாள்தோறும் காலையில் எழுந்தவுடன் சுறுசுறுப்பாக்கும் தேநீருக்கு நம்மில் பலரும் அடிமை என்றே சொல்லலாம். சிறிது நேரம் லேட்டானால் கூட நம்மால் வேலைகளில் கவனம் செலுத்த முடிவதில்லை. எல்லாக்...


இளநீர்

இளநீர் குடிப்பதால் இத்தனை நன்மைகளா?

தாகமாக இருக்கிறதென்று ஐஸ் வாட்டர் குடிப்பதை விட, ஆயிரம் மடங்குக்கும் அதிகமான பலன்கள் இளநீரில் இருக்கிறது. இவ்வளவு ஏன்? நீங்கள் அருந்தும் பெயர் தெரியாத பழச்சாறுகளில் ஆரம்பித்து, மாத...

2018 TopTamilNews. All rights reserved.