”உணவு டெலிவரி வர்த்தகம் 85 % மீண்டுவிட்டது” –ஜொமேட்டோ நிறுவனம் தகவல் !

”உணவு டெலிவரி வர்த்தகம் 85 % மீண்டுவிட்டது” –ஜொமேட்டோ நிறுவனம் தகவல் !

கொரோனா தொற்று பரவல் காரணமாக அறிவிக்கப்பட்ட பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்த உணவு டெலிவரி தொழில்துறை வர்த்தகம், கிட்டத்தட்ட 85 சதவீதம் அளவுக்கு மீண்டு விட்டதாக ஜொமேட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

”உணவு டெலிவரி வர்த்தகம் 85 % மீண்டுவிட்டது” –ஜொமேட்டோ நிறுவனம் தகவல் !

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு, உணவு ஆர்டர்களை வீட்டிலேயே டெலிவரி செய்யும் தொழில் நிறுவனங்களுக்கு சேவை அளிக்க தடைவிதிக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டபோது, உணவு டெலிவரி செய்வதற்கு நேர கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து படிப்படியாக வர்த்தகத்தில் மீண்டு வரும் இந்த துறை, தற்பொது பொது முடக்க காலத்திற்கு முன்பு இருந்த வர்த்தக அளவுக்கு பெரும்பாலும மீண்டு விட்டது தெரியவந்துள்ளது.

”உணவு டெலிவரி வர்த்தகம் 85 % மீண்டுவிட்டது” –ஜொமேட்டோ நிறுவனம் தகவல் !

இதை உறுதிப்படுத்தும் விதமாக, ஜொமேட்டோ நிறுவனம் அதன் வலைப்பதிவில் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி, மாதாந்திர மொத்த வியாபார அடிப்படையில் பார்க்கும் போது பொது முடக்க காலத்தில் நடைபெற்ற வர்த்தக அளவில் 85 சதவீதம் அளவுக்கு வர்த்தகம் தற்போது நடைபெறுவதாக ஜொமேட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

”உணவு டெலிவரி வர்த்தகம் 85 % மீண்டுவிட்டது” –ஜொமேட்டோ நிறுவனம் தகவல் !

டெல்லி மற்றும் மும்பையில் 95 சதவீதமும், பெங்களுரூ மற்றும் சென்னையில் 80 சதவீத வர்த்தகம் மீண்டுவிட்டதாகவும், சில நகரங்களில் பொது முடக்கத்திற்கு முன்பு நடைபெற்ற வர்த்தகத்தை காட்டிலும் கூடுதலாக செப்டம்பரில் நடைபெற்றதாகவும் ஜொமேட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

-எஸ். முத்துக்குமார்