அதிமுகவுக்கு குட் பை; திமுகவுக்கு பெருகும் ஆதரவு!

 

அதிமுகவுக்கு குட் பை; திமுகவுக்கு பெருகும் ஆதரவு!

கருணாஸை தொடர்ந்து தமிமுன் அன்சாரியும் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

அதிமுகவுக்கு குட் பை; திமுகவுக்கு பெருகும் ஆதரவு!

சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் காங்கிரஸ், மனித நேய மக்கள் கட்சி, முஸ்லீம் லீக், மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட், மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம்பெற்றுள்ளன. காங்கிரஸ் கட்சிக்கு 25, விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட், மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.அத்துடன் தி.மு.க-தமிழக வாழ்வுரிமை கட்சி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் அறிவாலயத்தில் திமுக தொகுதி பங்கீடு குழுவுடன் ஆலோசனை செய்து வருகிறார்.

அதிமுகவுக்கு குட் பை; திமுகவுக்கு பெருகும் ஆதரவு!

இந்நிலையில் தேர்தலில் திமுக கூட்டணிக்கு தமிமுன் அன்சாரி ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளார். மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக கடிதம் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் திமுகவுக்கு தமிமுன் அன்சாரி ஆதரவு அளித்துள்ள நிலையில் ஓரிடம் கேட்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை கட்சி ஆதரவு அளித்துள்ளது. கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த முக்குலத்தோர் புலிப்படை கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி ஆகிய கட்சிகள் இந்த முறை திமுக பக்கம் சாய்ந்துள்ளன.