சர்வதேச விதிகளுக்கு உட்பட்டே தடுப்பு மருந்து பரிசோதனை: ஐசிஎம்ஆர்

 

சர்வதேச விதிகளுக்கு உட்பட்டே தடுப்பு மருந்து பரிசோதனை: ஐசிஎம்ஆர்

சர்வதேச விதிமுறைகளுக்கு உட்பட்டு கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை நடத்தப்படுவதாக ஐசிஎம்ஆர் விளக்கம் அளித்துள்ளது.

னேவைச் சேர்ந்த பாரத் பயோடெக் தயாரித்து வரும் கோவிட்-19 தடுப்பூசியான  Covaxin-ஐ மருந்தை மனிதர்களுக்கு பரிசோதனை முறையில் வழங்க ஐசிஎம்ஆர் பரிந்துரை செய்துள்ளது. முதற்கட்ட சோதனையாக விலங்குகளுக்கு செலுத்தப்பட்டு வெற்றி கிடைத்ததால் அடுத்த கட்ட சோதனைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சர்வதேச விதிகளுக்கு உட்பட்டே தடுப்பு மருந்து பரிசோதனை: ஐசிஎம்ஆர்

இதுகுறித்து ஐசிஎம்ஆர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “கொரோனா தொற்றுக்கு விரைவாக மருந்து கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்பதைவிட அதன் பாதுகாப்பை உறுதி செய்வது, மருந்தின் தரம் ஆகியவைகளே மிக முக்கியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தடுப்பு மருந்து உருவாக்க மிக அவசரம் காட்டிவரும் நிலையில், சர்வதேச விதிகளுக்கு உட்பட்டே கொரோனா தொற்று நோய் தடுப்பு மருந்து பரிசோதனைகளை நடத்த அனுமதி அளித்துள்ளதாக ஐசிஎம்ஆர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆய்வக சோதனை வெற்றிகரமாக முடிந்திருக்கும் நிலையில், அடுத்தகட்டமாக மனிதர்களுக்கு மருந்தை செலுத்தும் சோதனைகளை செய்யப்பட உள்ளதாகவும், கொரோனா சிகிச்சையில் பாதுகாப்பு, இந்திய மக்களின் நலன் ஆகியவைதான், மற்ற எதையும்விட அதிக முக்கியத்துவம் தரும் விஷயங்களாக பார்க்கப்படும்”என ஐசிஎம்ஆர் கூறியுள்ளது. சுதந்திர தினத்துக்குள் மருந்தை வெளியிட வேண்டும் என்ற நோக்கில், பல வழிகாட்டுல்களை ஐசிஎம்ஆர், பின்பற்றவில்லை என புகார் எழுந்த நிலையில், இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.