‘பீகார் தேர்தல் முறையை பின்பற்றுவது முறைகேட்டுக்கு வழிவகுக்கும்’ – டி.ஆர் பாலு கடிதம்!

‘பீகார் தேர்தல் முறையை பின்பற்றுவது முறைகேட்டுக்கு வழிவகுக்கும்’ – டி.ஆர் பாலு கடிதம்!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழக அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. அரசியல் கட்சிகள் தீவிரமாக களப்பணியில் இறங்கியிருக்கும் அதே வேளையில், தேர்தல் ஆணையமும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. இதனிடையே, அண்மையில் நடந்து முடிந்த பீகார் சட்டமன்றத் தேர்தல் நடைமுறையை தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்ற இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு எதிர்க்கட்சிகள் மத்தியில் எதிர்ப்பை கிளப்பியது.

‘பீகார் தேர்தல் முறையை பின்பற்றுவது முறைகேட்டுக்கு வழிவகுக்கும்’ – டி.ஆர் பாலு கடிதம்!

அதாவது, முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்குச் சீட்டுகள் அளித்து, தபால் மூலம் வாக்களிக்கலாம் என்றும் அந்த வாக்குகள் உரிய அதிகாரியிடம் ஒப்படைக்கப்படும் என்ற பீகார் தேர்தல் நடைமுறை தான் பின்பற்றப்பட வேண்டும் என்ற அறிவிப்புக்கு எதிர்ப்புகள் கிளம்பின. இந்த உத்தரவை திரும்பப்பெற வேண்டும் என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

‘பீகார் தேர்தல் முறையை பின்பற்றுவது முறைகேட்டுக்கு வழிவகுக்கும்’ – டி.ஆர் பாலு கடிதம்!

இந்த நிலையில்,பீகார் தேர்தல் முறையை பின்பற்றுவது முறைகேட்டுக்கு வழி வகுக்கும் என்பதால் அதனை திரும்பப்பெற வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு திமுக எம்பி டி ஆர் பாலு கடிதம் எழுதியுள்ளார். ஒளிவுமறைவற்ற வாக்களிக்கும் முறையை சீர்குலைக்க இது வழிவகை செய்வதாக குற்றஞ்சாட்டிய அவர், தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவால் 15 சதவீதம் வாக்குகள் முறைகேடு நடக்க வழிவகுக்கும் என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.