‘கர்நாடக அரசை பின்பற்றுங்கள்’…அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தல்!

 

‘கர்நாடக அரசை பின்பற்றுங்கள்’…அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தல்!

இந்தியாவில் கொரோனா வைரஸ் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அந்தந்த மாநில அரசுகள் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் கொரோனாவுக்கு எதிராக மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைக்கு மத்திய சுகாதாரத்துறை பாராட்டு தெரிவித்திருக்கிறது. கர்நாடக அரசின் பல்வேறு துறைகள் சேர்ந்து தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுத்து வருகின்றதாம். தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டுபிடிப்பது தான் கடினமான காரியம்.

‘கர்நாடக அரசை பின்பற்றுங்கள்’…அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தல்!

ஆனால் கர்நாடக அரசு அதனை துல்லியமாக கண்டறிந்து முதல் மற்றும் இரண்டாம் நிலை தொடர்புகளை கடுமையாக தனிமைப்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் மற்ற மாநிலங்களும் கர்நாடக மாநில கொரோனா தடுப்பு நடவடிக்கையை பின்பற்றுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

கர்நாடகாவில், கட்டாய தனிமை படுத்துதல் மூலமாக கொரோனா கட்டுப்படுத்தப்பட்டதாகவும் வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள் “சேவா சிந்து” என்ற இணைதள பக்கத்தில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் அதன் மூலம் அவர்கள் தனிமை படுத்தப்பட்டுள்ளார்களா என்பதை அரசு கண்காணிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.