”மடக்கும் 5ஜி ரேசர் போன்”- அக்டோபரில் அறிமுகம் செய்யும் மோட்டோரோலா

”மடக்கும் 5ஜி ரேசர் போன்”- அக்டோபரில் அறிமுகம் செய்யும் மோட்டோரோலா

மடக்கி விரித்து பயன்படுத்தக்கூடிய ரேசர் 5 ஜி போனை இந்தியாவில் அக்டோபரில் அறிமுகப்படுத்த மோட்டோரோலா திட்டமிட்டுள்ளது.

”மடக்கும் 5ஜி ரேசர் போன்”- அக்டோபரில் அறிமுகம் செய்யும் மோட்டோரோலா

இது தொடர்பாக மோட்டோரோலா நிறுவனம் ஒரு முன்னோட்ட காணொளியை வெளியிட்டுள்ளது. அதில், ரேசர் 5 ஜி போன் மட்டுமின்றி, ஒரு பிரண்ட் லோடிங் வாசிங்மெஷின், டபுள் டோர் பிரிட்ஜ், ஸ்மார்ட் டிவி மற்றும் ஸ்பிலிட் ஏசி ஆகிய பொருட்கள் பண்டிகை காலத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

”மடக்கும் 5ஜி ரேசர் போன்”- அக்டோபரில் அறிமுகம் செய்யும் மோட்டோரோலா

இந்திய வாடிக்கையாளர்கள், ரேசர் 5 ஜி போனை வாங்க முன்பதிவு செய்துகொள்வதற்காக ஒரு வலைதளத்தையும் மோட்டோரோலா நிறுவனம் ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே ரேசர் 5ஜி போன், அக்டோபரில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

”மடக்கும் 5ஜி ரேசர் போன்”- அக்டோபரில் அறிமுகம் செய்யும் மோட்டோரோலா

சர்வதேச அளவில் கடந்த 9ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட ரேசர் 5ஜி போனில் 6.5 இன்ச் பி-ஓஎல்இடியிலான பிரதான திரை, 2.7 இன்ச் ஒஎல்இடி கொண்ட நோட்டிபிகேஷன்களுக்கான 2வது திரை என இரண்டு திரைகள் உள்ளன. ஸ்நாப்டிராகன் 765ஜி பிராசசர், 8ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, ஆண்டிராய்ட் 10 இயங்குதளம் மற்றும் 15 வாட்ஸ் டர்போ சார்ஜிங் உடன் கூடிய 2,800 எம்ஏஎச் பேட்டரி ஆகியவற்றுடன் இந்திய மதிப்பில் 1 லட்சத்து 3 ஆயிரம் ரூபாய்க்கு அறிமுகமானது.

”மடக்கும் 5ஜி ரேசர் போன்”- அக்டோபரில் அறிமுகம் செய்யும் மோட்டோரோலா

இந்நிலையில் இந்தியாவிலும் ரேசர் 5ஜி போன், எந்த மாற்றமும் இல்லாமல் அதே சிறப்பம்சம் மற்றும் விலையில் ரேசர் 5 ஜி போன் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

-எஸ். முத்துக்குமார்