லாலு பிரசாத் யாதவுக்கு பெயில்… விரைவில் விடுதலையாகிறார்!

 

லாலு பிரசாத் யாதவுக்கு பெயில்… விரைவில் விடுதலையாகிறார்!

பிகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவிற்கு கால்நடை தீவன வழக்கில் ஜாமீன் வழங்கி ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இன்னும் மூன்று நான்கு நாட்களில் பிணையில் விடுதலையாவார் என்று கூறப்படுகிறது.

லாலு பிரசாத் யாதவுக்கு பெயில்… விரைவில் விடுதலையாகிறார்!

1996ஆம் ஆண்டு லாலு பிரசாத் பீகார் முதலமைச்சராக இருந்தபோது கால்நடை தீவன ஊழல் செய்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் 4 வழக்குகளில் லாலு பிரசாத் யாதவுக்கு மொத்தமாக சுமார் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதில் ஏற்கெனவே மூன்று வழக்குகளில் ஜாமீன் பெற்றுவிட்டார்.

லாலு பிரசாத் யாதவுக்கு பெயில்… விரைவில் விடுதலையாகிறார்!

இச்சூழலில் தும்கா கருவூலத்தில் இருந்து 3.13 கோடி ரூபாய் ஊழல் செய்தது தொடர்பான நான்காவது வழக்கில் ஜாமீன் கோரி லாலு பிரசாத் யாதவ் ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதற்குப் பின்பே லாலு பிரசாத் யாதவுக்கு இன்று ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்தது. இதன்மூலம் விரைவில் லாலு பிரசாத் சிறையில் இருந்து பிணையில் விடுதலையாகலாம் என்று கூறப்படுகிறது. பல்வேறு உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டுள்ள லாலு பிரசாத் யாதவ் தற்போது டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.